மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago
ஹாவேரி: பஞ்சமசாலி சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, வரும் 20ம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என, கர்நாடகா அரசுக்கு, மடாதிபதி பசவ ஜெயமிருத்யுஞ்சய சுவாமி கெடு விதித்துள்ளார்.கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, வீரசைவ லிங்காயத்தின் உட்பிரிவான, பஞ்சமசாலி சமூகத்தினர் தங்களுக்கு 2ஏ இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாதால், பா.ஜ., அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வை கைவிட்டனர். காங்கிரஸ் ஆதரவு அளித்து, ஆட்சிக்கு வர, முக்கிய பங்கு வகித்தனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் 2ஏ இடஒதுக்கீடு குறித்து, அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் ஆட்சி அமைந்து, ஏழு மாதங்கள் ஆகியும் எந்த அறிவிப்பும் வரவில்லை.இதனால் அரசை கண்டித்து, பஞ்சமசாலி மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமி தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.ஹாவேரியில் நேற்று போராட்டம் நடந்தது. புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அங்கு சென்ற போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினர்.அப்போது மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்சய சுவாமி அளித்த பேட்டி:எங்கள் சமூகத்திற்கு 2ஏ இடஒதுக்கீடு கேட்டு, மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். இடஒதுக்கீடு கிடைத்தால் தான், கல்வியில் நாங்கள் வளர்ச்சி அடைய முடியும். வரும் 20ம் தேதிக்குள் அமைச்சரவை கூட்டி, இடஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும்.இல்லாவிட்டால் தாவணகெரே அல்லது பெங்களூரில், பெரிய அளவில் போராட்டம் நடத்தி, எங்கள் பலத்தை காட்டுவோம். முந்தைய பா.ஜ., அரசு 2டி இடஒதுக்கீடு வழங்கியது. அதுவும் நிறைவேறவில்லை.எந்த அரசாக இருந்தாலும் சரி, எங்களது போராட்டம் தொடரும். எங்கள் சமூகத்தை சேர்ந்த 12 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர். அரசு யோசித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago