உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2ம் கட்ட லோக்சபா தேர்தல்: திரிபுராவில் ஓட்டுப்பதிவு அதிகம்: மஹா.,வில் குறைவு

2ம் கட்ட லோக்சபா தேர்தல்: திரிபுராவில் ஓட்டுப்பதிவு அதிகம்: மஹா.,வில் குறைவு

புதுடில்லி: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று (ஏப்ரல் 26) காலை 7 மணிக்கு துவங்கி விறு, விறுப்பாக நடந்து முடிந்தது. திரிபுராவில் அதிக ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. மஹா.,வில் குறைவாக பதிவாகி உள்ளது. இரவு 7 மணி நிலவரப்படி அதிகபட்சமாக திரிபுராவில் 78.63 சதவீதமும், குறைந்தபட்சமாக மஹா.,வில் 54.34 சதவீதமும் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட ஓட்டுபதிவு கடந்த 19ம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 65.50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் வெயில் காரணமாக ஓட்டு சதவீதம் குறைந்ததாக கூறப்பட்டது.இந்நிலையில் 13 மாநிலங்களில் உள்ள 88 லோக்சபா தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதற்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் ஓய்ந்தது. கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகள் உட்பட, 88 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த முறை அவர் அமேதி தொகுதியில் தோற்றாலும், வயநாட்டில் 4.30 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.பா.ஜ., சார்பில் மத்திய ஜல்சக்தி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அவரை கட்சி லோக்சபா வேட்பாளராக்கி உள்ளது. அவருக்கும் காங்., சிட்டிங் எம்.பி., சசி தரூருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.பா.ஜ., இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இரண்டாவது முறையாக பெங்களூரு தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்து மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2019ல் இதே தொகுதியில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி போட்டியிட்டு, சுயேட்சை வேட்பாளரான சுமலதா அம்பரீஷிடம் தோல்வி அடைந்தார்.கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷுக்கு பெங்களூரு ரூரல் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இவர்களை தவிர நட்சத்திர வேட்பாளர்களான நடிகை ஹேமமாலினி மற்றும் ராமாயணம் தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் ஆகியோர் பா.ஜ., சார்பில் உத்தர பிரதேசத்தின் மதுரா மற்றும் மீரட் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு

பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் ட்ரோன்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு பகுதியில் உச்ச கட்ட பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது.

ஓட்டுப்பதிவு சதவீதம்

இன்று மாலை 7மணி நிலவரப்படி, திரிபுரா - 78.63சத்தீஸ்கர் - 73.05மணிப்பூர் - 77.18மே.வங்கம் - 71.84ம.பி., - 56.60அசாம்- 70.68ராஜஸ்தான் - 63.82காஷ்மீர் - 71.63கேரளா- 65.28உ.பி., - 54.82கர்நாடகா - 69.23பீஹார் - 54.91மஹாராஷ்டிரா - 54.34 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Velan Iyengaar
ஏப் 26, 2024 20:34

உ பி யில் குறைவு என்றால் உலக மஹா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சிக்கு வயிற்றில் புளியை கரைக்கும் ராமர் கோவில் கட்டி சாதித்த்தோம் என்று சொல்லி வாக்கு கேட்ட மாநிலத்திலேயே மக்கள் திரண்டு வந்து வாக்கு செலுத்தவில்லை என்றால் இந்த கட்சியின் அடிப்படை கணக்கு பெரும் அளவில் ஆட்டம் கண்டுகொண்டிருக்கு யோகி உள்ளடி நன்றாக வேலை செய்வதாக தான் அர்த்தம்


அப்புசாமி
ஏப் 26, 2024 20:22

உ.பி ல எல்லோரும் சந்தோஷமா வீட்டில் இருக்காங்க. ஓட்டுப்.போடக்.கூட வெளில வர முடியாம அவ்ளோ சந்தோஷம்.


A1Suresh
ஏப் 26, 2024 19:57

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம சுலோகத்தை மேற்கோளாக வைத்து பிரதமரை வாழ்த்துகிறேன் ராமோ விராமோ விரதோ மார்க்கோ நேயோ நயோநய: என்ற சுலோகம் உண்டு அதில் ஸ்ரீராமரை எதிர்த்து நிற்பவரின் பலமும், வரமும், அஸ்திரங்களும், தந்திரங்களும் பலனின்றி ஓய்வெடுக்கும்-விராமம் கொள்ளும் என்பது தான் அவ்வாறே எங்கள் மோடிஜியை எதிர்ப்பவர்களின் தந்திரமும், பலமும், சூழ்ச்சியும் பலனின்றி ஓய்வெடுக்கும் இப்பொழுதே முதல்வர் ஓய்வெடுக்க மாலத்தீவு செல்கிறார் தேர்தலின் பிறகு தோல்வியை ஒத்துக்கொண்டு பப்பு அவர்களும் ஐரோப்பாவிற்கு ஓய்வெடுக்க செல்வார் விஜயீ பவ மோடிஜி கீர்த்திமான் பவ மோடிஜி ஆயுஷ்மான் பவ மோடிஜி


A1Suresh
ஏப் 26, 2024 18:38

மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரபிரதேச மாநிலங்களில் எங்கள் பாஜக பெருவாரியாக வெல்லும் கேரளாவில் அது தலைகீழாகும் என்ன பேசினாலும் உண்மையை பேசவேண்டும்


Srinivasan Krishnamoorthi
ஏப் 26, 2024 17:58

congrats


JAISANKAR
ஏப் 26, 2024 17:50

மகாராஷ்டிரா வில் ஆட்சியில் உள்ளதுபாஜக தான் மட தனமாக நீக்கி இருக்க வாய்ப்பு உள்ளது


RAAJ68
ஏப் 26, 2024 14:27

ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லி விட்டார் மஹாவில் BJP க்கு எதிர்பாரத்த எண்ணிக்கை கிடைக்காது என்று. அதறகு ஏற்றார போல BJP ஆதரவு வாக்காளர்கள் பெயர் நீக்கப் பட்டிருக்கும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ