உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யதுவீருக்கு 2வது ஆண் குழந்தை

யதுவீருக்கு 2வது ஆண் குழந்தை

மைசூரு: ஆயுத பூஜை நாளன்றே, அரச குடும்பத்தினருக்கு மற்றொரு வாரிசு வந்துள்ளது. பா.ஜ., - எம்.பி., யதுவீர், இரண்டாவது ஆண் குழந்தைக்கு தந்தையானார்.மைசூரில் தசரா கொண்டாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அரண்மனையில் அரச குடும்பத்தினர் பூஜை, புனஸ்காரங்களை செய்கின்றனர். அக்டோபர் 3ம் தேதி, மைசூரு அரண்மனையில் மஹாராஜா யதுவீர், தனியார் தர்பார் நடத்தினார். அன்று நடந்த பூஜைகளில் அவரது மனைவி திரிஷிகா குமாரி பங்கேற்றார். அப்போது அவர் தன் வயிற்றை மறைத்திருந்தார். அவர் இரண்டாவதாக கர்ப்பமானது தெரிந்தது.அவர் பிரசவத்துக்காக, மைசூரின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆயுத பூஜையான நேற்று அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. யதுவீர் தம்பதிக்கு, ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்ததால், அரண்மனையில் தசரா கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
அக் 18, 2024 05:45

அப்ப, நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடுமுன்னு சொல்லுங்க.


சாண்டில்யன்
அக் 18, 2024 18:28

சரித்திரம் தெரியாமல் ஏதாவது உளரக்கூடாது இந்த ஆண் மகப்பேறை கொண்டாட காரணமுண்டு இதன் பின்னணி தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்


புதிய வீடியோ