உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் யஷ் கட் அவுட்டில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

நடிகர் யஷ் கட் அவுட்டில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி

ஹூப்பள்ளி: கன்னட நடிகர் யஷ்ஷின் பிறந்த நாளை ஒட்டி, 'கட் அவுட்' கட்டும்போது, மின்சாரம் பாய்ந்து, மூன்று ரசிகர்கள் உயிரிழந்தனர். கன்னட திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் யஷ். இவரது நடிப்பில் வந்த, கே.ஜி.எப்., படம் மாபெரும் வெற்றி பெற்றது. நேற்று இவரது பிறந்த நாள். இதற்காக, மாநிலத்தின் பல இடங்களில் ரசிகர்கள் வாழ்த்து பேனர்கள் வைத்திருந்தனர்.கதக் மாவட்டம், லட்சுமேஷ்வராவின் சூரனகி கிராமத்தின் அம்பேத்கர் நகரில், ரசிகர்கள் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிஅளவில், யஷ்ஷின் 25 அடி உயர கட் அவுட்டை கட்டிக் கொண்டிருந்தனர். கட் அவுட்டை கட்ட இரும்பு கம்பியை பயன்படுத்தியபோது, உயரே இருந்த மின் கம்பியில் இரும்பு கம்பி உராய்ந்தது.இதில், மின்சாரம் பாய்ந்ததில் ஹனுமந்தா, 21, முரளி, 20, நவீன், 21, ஆகிய மூன்று ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மூவர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில், படப்பிடிப்பில் யஷ் இருந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த அவர், சிறப்பு விமானத்தில் நேற்று மாலை 4:00 மணியளவில், ஹூப்பள்ளி வந்திறங்கினார். உயிரிழந்த ரசிகர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களது குடும்பத்தினருக்கு யஷ் ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ