உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 3 நக்சல்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காங்கேர்: சத்தீஸ்கர் மாநிலம் காங்கேர் மாவட்டம் மற்றும் கரியாபந்த் மாவட்ட எல்லையில் உள்ள ரவாஸ் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று காங்கேர் மற்றும் கரியாபந்த் மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்புப் படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு பெண் உட்பட மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர். மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. இவர்களின் தலைக்கு ஒட்டுமொத்தமாக, 14 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்தில் இருந்து தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட மூன்று ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சத்தீஸ்கரில் இந்தாண்டில் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளில் இதுவரை, 252 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ