உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைக் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உடல் கருகி பலி; ராஜஸ்தானில் சோகம்

பைக் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உடல் கருகி பலி; ராஜஸ்தானில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முண்டியாட் - கட்லு சாலையில் கின்சார் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிதராம் தேவசி, கல்லுரம் தேவசி மற்றும் ஜெதராம் தேவசி ஆகிய 3 பேரும், நேற்று கட்லு கிராமத்திற்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து கிடந்துள்ளது. அந்த ஒயர் அவர்கள் சென்ற பைக்கில் உரசியதும், மின்சாரம் பாய்ந்தது. இதனால், பைக்கில் தீப்பற்றி எரிந்தது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் எரிந்து சாம்பலாகினர். இதனை நேரில் பார்த்தவர்கள், மின்சாரத்துறையினருக்கும், போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, நாகவூர் எம்.பி., ஹனுமன் பெனிவால், உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

अप्पावी
மார் 24, 2025 09:04

கதி சக்தி.. வித்யுத் சக்தி... சூப்பர்.


N Sasikumar Yadhav
மார் 24, 2025 14:26

உங்க திராவிட மாடல் கதி சக்தி திராவிட மாடல் அரசால் விற்கப்படும் சாராயத்தால் விழுந்து கிடக்கிறது


Barakat Ali
மார் 24, 2025 07:32

அச்சே தின் ????


N Sasikumar Yadhav
மார் 24, 2025 14:24

உங்க மானங்கெட்ட திராவிட மாடல் ஆட்சியில் தினமும் அச்சே தீன்தான் முதல்ல தமிழக நிலைவரத்தை பாருங்கோ. உங்க திராவிட மாடல் ஊ...பி சட்டவிரோதமாக வைத்த தீயமுக கொடிகம்பத்தை அகற்றும்போது மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டாராம் முதல்ல அதை கவனியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை