ஹரியானாவில் 3 பேருக்கு கொரோனா
குருகிராம்:ஹரியானா மாநிலத்தில், மூன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சமீபத்தில் குருகிராம் திரும்பிய 31 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, குருகிராமில் வசிக்கும் 62 வயது ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.அதேபோல, பரிதாபாத் சேத்பூரில் பாதுகாவலராக பணியாற்றும் 28 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.பல நாட்களாக காய்ச்சல், இருமல் மற்றும் சளி ஆகியவற்றால் அவதிப்பட்ட அவர், டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அப்போது, நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.குருகிராம் சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் ஜெ.பி. ராஜ்லிவால், “குருகிராமில் பாதிகப்பட்ட இருவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். சுகாதாரத் துறை ஊழியர்கள் இருவரையும் கண்காணித்து வருகின்றனர். குடும்பத்தினர் இன்னும் சில நாட்களுக்கு அவர்களிடம் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,”என்றார்.பரிதாபாத் மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராம்பகத், “பரிதாபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபரின் தொண்டை உமிழ்நீர் மாதிரியை கேட்டு, டில்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அது வந்த பின், மீண்டும் ஆய்வு செய்யபப்டும்.அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு முழு பரிசோதனை நடத்தப்பட்டது. அனைவரும் ஆரோக்கியமாக இருக்கின்றனர்,”என்றார்.