மேலும் செய்திகள்
ரூ.6 கோடி போதைப்பொருள் மிசோரமில் பறிமுதல்
19-Sep-2024
புதுடில்லி:சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இரு நைஜீரியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 3.3 கோடி மதிப்புள்ள 563 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரகசியத் தகவல் அடிப்படையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஜோசுவா அமராச்சுக்வா,30, என்பவரும் அவரது கூட்டாளியும் கார் டிரைவருமான வினீத்,24, ஆகிய இருவரும் செப். 27ல் கைது செய்யப்பட்டனர். ஜோசுவாவிடம் இருந்து 257 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது.இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படயில், ஹரியானா மாநிலம் சோஹ்னாவில் பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோன் என் கோலோ செய்டோ என்ற மைக்,27, என்பவரும் கைது செய்யப்பட்டு, 306 கிராம் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 563 கிராம் கோகைனின் சர்வதேச மதிப்பு 3.3 கோடி ரூபாய்.இவ்வாறு அவர் கூறினார்.
19-Sep-2024