உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரம்மோற்சவத்தின் போது 30 லட்சம் திருப்பதி லட்டு பிரசாதங்கள் விற்பனை: தேவஸ்தானம் தந்த அப்டேட்

பிரம்மோற்சவத்தின் போது 30 லட்சம் திருப்பதி லட்டு பிரசாதங்கள் விற்பனை: தேவஸ்தானம் தந்த அப்டேட்

திருப்பதி: திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில், 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.ஆந்திரா மாநிலம், திருமலை திருப்பதி பிரம்மோற்சவ விழா அக்டோபர் 4ம் தேதி துவங்கி, நேற்று (அக்.,12) வரை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் மலையப்ப சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தில் 15 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொண்டனர். கடைசி நாள், கருடசேவை தரிசனத்தை காண மட்டும் 3.5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், திருப்பதியில் நடைபெற்ற பிரம்மோற்சவ நிகழ்வில் 30 லட்சம் லட்டு பிரசாதங்கள் விற்பனையானது என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து, தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரம்மோற்சவத்தில் முதல் 8 நாட்களில் ரூ.50க்கும் விற்கப்படும் சிறிய லட்டுகள் மட்டும் 30 லட்சம் வரை விற்பனையானது. கடந்த ஆண்டிலும் இதே அளவிலான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ரூ.26 கோடி

உண்டியல் வசூல் ரூ.26 கோடி. கடந்த ஆண்டை விட ரூ.2 கோடி அதிகம் வசூலானது. இந்த ஆண்டு 26 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு 16 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு மருத்துவ உதவி வழங்க 45 டாக்டர்கள், 60 மருத்துவ பணியாளர்கள் பணியில் இருந்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சாண்டில்யன்
அக் 13, 2024 18:09

மோடி அரசு இத்தனை ஆயிரம் கோடி GST வசூல்ன்னு பீத்திக்கிற மாதிரி தன இதுவும் பக்தர்களுக்கு மட்டுமல்ல அள்ளிக் கொடுக்கும் பெருமாளுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக நிறைவாக குறைவின்றி செய்ய வேண்டும் தேவஸ்தான நிர்வாகம் மக்கள் பணம் மக்களுக்கே போகட்டும் என கருத வேண்டும்


சாண்டில்யன்
அக் 13, 2024 18:02

இங்க பார்க்கிற மாதியாகவா லட்டு பெரிதாக கிடைக்கிறது டேபிள் டென்னிஸ் பால் சைஸ்தான் அதுவும் வட்டமா இருக்குமா பொன்மழையில் குளிக்கும் பெருமாள் வேண்டுவோர்க்கு அள்ளித் தரும் பெருமாள் சிக்கனம் செய்வதில்லை நிர்வாகம்தான் பெயரை கெடுக்கிறது ஒருவேளை இப்போது சைஸ் சரிசெய்யப் பட்டுள்ளதோ என்னவோ தெரியலை


சாண்டில்யன்
அக் 13, 2024 18:02

இங்க பார்க்கிற மாதியாகவா லட்டு பெரிதாக கிடைக்கிறது டேபிள் டென்னிஸ் பால் சைஸ்தான் அதுவும் வட்டமா இருக்குமா பொன்மழையில் குளிக்கும் பெருமாள் வேண்டுவோர்க்கு அள்ளித் தரும் பெருமாள் சிக்கனம் செய்வதில்லை நிர்வாகம்தான் பெயரை கெடுக்கிறது ஒருவேளை இப்போது சைஸ் சரிசெய்யப் பட்டுள்ளதோ என்னவோ தெரியலை


ديفيد رافائيل
அக் 13, 2024 15:43

பிரச்சினைன்னு வந்துடுச்சுல்ல அதான் சொல்றானுங்க. இதுக்கு முன்பும் நல்லா தான் இருந்துச்சுனு மறைமுகமாக சொல்றானுங்க.


கல்யாணராமன்
அக் 13, 2024 10:48

ஒவ்வொரு வருடமும் இப்படி லட்டு விற்பனை பற்றி தகவல் சொன்னது இல்லையே. இப்போது சொல்வதன் நோக்கம் என்ன?


பாமரன்
அக் 13, 2024 08:29

ச்சே கஷ்டப்பட்டு கிளப்பி விட்டதெல்லாம் வீணா போச்சே... நாய்டு காரு ஆப்பை தேடிப் பிடித்து குந்திகிட்டதை இப்பவாவது நம்புறேளா பகோடாஸ்... ஆந்திர மக்களிடையும் நம்ம அறிவு கொஞ்சம் உண்டு... கொஞ்சம் ஆராய்ஞ்சு செய்வாங்க...அடுத்த தேர்தலில் நாய்டு அன் கோவ வச்சும் செம்வாங்க...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை