மேலும் 300 இ-பஸ் டில்லியில் துவக்கம்
புதுடில்லி:தலைநகர் டில்லியில் மேலும், 300 மின்சார பஸ்கள் மற்றும் டிரான்ஸ் யமுனா பகுதிக்கான சீரமைக்கப்பட்ட வழித்தடங்களை முதல்வர் ரேகா குப்தா கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது, ரேகா குப்தா பேசியதாவது: அடுத்த ஆண்டு இறுதிக்குள் டில்லியில் அனைத்து பஸ்களும் மின்சார பஸ்களாக மாற்றப்பட்டும். தற்போது துவக்கப்பட்டுஉள்ள மின்சார பஸ்களும் யமுனா வழித்தடங்களில் இயக்கப்படும். இந்த வழித்தடங்களில் பொதுமக்களின் ஆலோசனைப்படி வழித்தடம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏ.சி., மின்சார பஸ்களில் கண்காணிப்புக் கேமராக்கள், அவசர உதவி பொத்தான்கள் உட்பட பயணியருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.