உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 31,555 பேர் சேர்ந்தனர்

மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் 31,555 பேர் சேர்ந்தனர்

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள யு.பி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம், ஏப்., 1 முதல் செயல்பாட்டுக்கு வந்தது. 'தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த ஒருங்கிணைந்தஓய்வூதிய திட்டம் பொருந்தும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின்படி, குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ஓய்வு வயதுக்கு முன்பாக பெற்ற 12 மாத அடிப்படை சம்பளத்தின் சராசரியில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. பார்லி.,யின் லோக்சபாவில், இது தொடர்பாக நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

யு.பி.எஸ்., திட்டத்தை, கடந்த 20ம் தேதி வரை, 31,555 மத்திய அரசு ஊழியர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்க, 7,253 கோரிக்கைகள் பெறப்பட்டன. இதில், 4,978 கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தை தேர்வு செய்வதற்கான கால அவகாசம் வரும் செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யு.பி.எஸ்., திட்டத்தின் கீழ் கூடுதல் சலுகைகளை பெற, 25,756 ஓய்வு பெற்ற ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kumar Ramamurthi
ஜூலை 29, 2025 04:33

தமிழ்நாட்டு அரசின் ஊழியர்கள்தான் பாவம் செய்தவர்கள். இந்த அரசு வறட்டு பிடிவாதத்தை காரணமாக, மத்திய அரசின்எந்த திட்டத்தினையும் செயற்படுத்தாமல், தனது ஊழியர்களை தொங்கலில் விட்டுள்ளது. தற்போது பணியிலிருந்து ஓய்வு பெரும் எந்த ஊழியரும் ஓய்வு ஊதியம் பெற இயலாது. ஆனால் தொகை மட்டும் பிடித்தம் செய்து வருகிறது. ஒரு சமயம் தேர்தல் சமயத்தில் அமல் படுத்தினால், வரும் அரசு நிதி சுமையை ஏற்க இயலாமல் திண்டாடட்டும் என்று நினைக்கிறார்கள் போலும்


புதிய வீடியோ