ஒப்பந்த அடிப்படையில் மேலும் 320 எலக்ட்ரிக் பஸ்கள்
பெங்களூரு: ஒப்பந்த அடிப்படையில் 320 எலக்ட்ரிக் 'ஏசி' பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.இதுதொடர்பாக, பி.எம்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:பயணியர் வசதிக்காக, புத்தாண்டில் பி.எம்.டி.சி.,யில், புதிதாக 320 'ஏசி' எலக்ட்ரிக் பஸ்கள் வாங்கப்படும். பஸ்களை வழங்கும் டெண்டரை, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் அங்கமான ஓம் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே 'ஒர்க் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது.ஒப்பந்த அடிப்படையில், 12 ஆண்டுகளுக்கு 320 பஸ்கள் பெறப்படும். எலக்ட்ரிக் பஸ்களுக்கு ஓட்டுனர்களையும் அசோக் லேலண்ட் நிறுவனமே நியமிக்கும். டிசம்பர் இறுதியில் சோதனை ஓட்டத்துக்காக, பஸ்கள் வரவுள்ளன.புதிய மின்சார பஸ்கள், மெஜஸ்டிக்கில் இருந்து விமான நிலைய பாதையில் இயக்கப்படும். தற்போது விமான நிலைய வழித்தடத்தில், வால்வோ பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் வேறு வழித்தடங்களுக்கு மாற்றப்படும்.பி.எம்.டி.சி.,யில் 1,000க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பஸ்கள் இயங்குகின்றன. புதிதாக 320 பஸ்கள் சேர்க்கப்பட்ட பின், எலக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.