உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜ.,வின் அரசியல்" - ராஜ்நாத்சிங் பேச்சு

"மக்களுக்கு சேவை செய்வதே பா.ஜ.,வின் அரசியல்" - ராஜ்நாத்சிங் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. நாட்டை ஆள்வதற்கு அல்ல' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.ஒடிசாவில் நபரங்பூர், கலஹண்டி, போலங்கிர் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: காங்கிரஸ் உருவாக்கிய அரசியல் நம்பகத்தன்மை நெருக்கடிக்கு பா.ஜ., முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் மத்தியில் நம்பிக்கையை பா.ஜ., உருவாக்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.தேர்தலுக்குப் பிறகு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் மறந்துவிட்டது. இதனால் மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர். ஆனால், 2014ல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நிலைமை மாறிவிட்டது. மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் பா.ஜ., அரசியல் செய்து வருகிறது. நாட்டை ஆள்வதற்கு அல்ல. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி