உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் எந்த பகுதியையும் பாக்., என கூறக்கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்

இந்தியாவின் எந்த பகுதியையும் பாக்., என கூறக்கூடாது: தலைமை நீதிபதி சந்திரசூட் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது' என்று கர்நாடகா நீதிபதிக்கு , சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி உள்ளார்.அண்மையில் நில உரிமையாளருக்கும், குத்தகைதாரருக்கும் இடையிலான பிரச்னை குறித்த வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி, வேதவியாசாச்சர் ஸ்ரீஷானந்தா விசாரித்தார். அப்போது அவர், பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் எனக் குறிப்பிட்டதுடன், பெண் வக்கீல் முகம் சுழிக்கும் விதமான கருத்துக்களையும் கூறியது பெரும் சர்ச்சையானது.இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதி ஸ்ரீஷானந்தாவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திரசூட் கண்டித்தார். இன்று(செப்.,25) சுப்ரீம் கோர்ட்டில், தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது கர்நாடகா நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். 'இந்தியாவின் எந்த பகுதியையும் பாகிஸ்தான் என்று கூறக் கூடாது. நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் எந்த பிரிவினருக்கும் பாரபட்சம் மற்றும் அவதூறு கருத்துகளை கூறக்கூடாது' என தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுரை வழங்கி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

ameen
செப் 30, 2024 13:16

இது எல்லாம் எங்கு நடக்குது? கற்பனையாக சொல்வதை விட்டுட்டு ஆதாரத்துடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாமே....


ஆரூர் ரங்
செப் 25, 2024 18:50

ஊர்வலங்களில் பாகிஸ்தான் வாழ்க என முழங்குகிறார்கள். பாகிஸ்தான் கொடியுடன் செல்கிறார்கள். தேசியக் கொடி ஏற்ற மறுக்கிறார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் ஊருக்குள் நுழைய அனுமதி கேட்க வேண்டும் எனும் பகுதிகள் இல்லையா?நீதிபதி ஊடகங்களைப் பார்ப்பதில்லையா? பூனை கண்ணை மூடிக்கொண்டால்..


Subash BV
செப் 25, 2024 18:48

Dont make it universal. Naither indian Muslims or Pakistan worth it. INDIAN MUSLIMS ALWAYS DREAMING PAKISTAN TO CONVERT BHARATH AS AN ISLAMIC NATION THINK SERIOUSLY.


ஆரூர் ரங்
செப் 25, 2024 18:45

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் போக முஸ்லிம்களிடம் அனுமதி வாங்க போலீஸ் கூறுகிறது. இது இந்தியாவா பாகிஸ்தானா? இதே நீதிபதி நாட்டின் சில முஸ்லிம் பகுதிகளில் சொத்து வாங்க முடியாது. ஏன் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். என்ன சொல்றீங்க?


கனிஷ்கா ஜோதிட நிலையம் கனிஷ்கா திருமண தகவல் மையம்
செப் 25, 2024 18:05

நல்லதொரு முன்னுதாரணம்


Narasimhan
செப் 25, 2024 17:46

ஆனால் பாக் கோடியை ஏந்தி நம் நாட்டிலேயே ஊர்வலம் வந்தால் அதில் தவறில்லை. சரிதானே கனம் நீதிபதி அவர்களே


Mahendran Puru
செப் 25, 2024 17:45

அந்த ஜட்ஜ் மன்னிப்பு கேட்டு விட்டார். பிரச்சனை முடிந்தது.


venugopal s
செப் 25, 2024 17:08

இதை அவர் எல்லா பாஜகவினருக்கும் கொடுத்த அறிவுரை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!


vadivelu
செப் 26, 2024 07:16

ஆமாம் அவர்களுக்கு மட்டும்தான் உரைக்கிறது நீங்கள் அப்படி நடந்து கொள்ளும் சமயங்களில் .பாகிஸ்தான் ஜிந்தா பாத் என்று எங்கே கூறினாலும் , அவர்களின் நாட்டு பற்றை பாராட்டி , அங்கே அது பாகிஸ்தான் போல் இருக்கே என்று சொல்லும் துணிவே அவர்களுக்குத்தான்.


sugumar s
செப் 25, 2024 17:06

srishananda should be demoted from judge to advocate position or some admin work in court. in the interest of country this needs to be done


சிந்தனை
செப் 25, 2024 16:17

குறிப்பா அப்துல் காதர் கொலை செய்தார் என்றால் முஸ்லிம் என்று சொல்லக்கூடாது இந்தியன்னு சொல்லணும்.... சீக்கிரமா சொல்லுவார் சட்டப்பதி... அப்படின்னு நினைக்கிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை