உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எப்படியெல்லாம் நடிக்கிறாங்க… பி.டி.உஷா மீது வினேஷ் போகத் சரமாரி குற்றச்சாட்டு

எப்படியெல்லாம் நடிக்கிறாங்க… பி.டி.உஷா மீது வினேஷ் போகத் சரமாரி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பாரீசில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த போது, தன்னை சந்தித்த இந்திய தடகள சங்க தலைவர் பி.டி.உஷா, அனுமதி பெறாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஆதரவு அளிப்பது போல் நடித்தார்' என, சமீபத்தில் காங்கிரசில் இணைந்து , ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வினேஷ் போகத் கூறியுள்ளார்.

தகுதி நீக்கம்

பாரீசில் நடந்த ஒலிம்பிக்கில் 50 கிலோ பிரிவு மல்யுத்த இறுதிப்போட்டியில் இருந்து அதிக எடை காரணமாக இந்தியாவின் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து சர்வதேச தீர்ப்பாயத்திலும் அவர் தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவரை சந்தித்த இந்திய தடகள சங்கத்தலைவர் பிடி உஷா அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.

அரசியல் களத்தில்

சமீபத்தில் இந்தியா திரும்பிய வினேஷ்போகத், சமீபத்தில் காங்கிரசில் இணைந்ததுடன், ஹரியானா சட்டசபை தேர்தலில், ஜூலானா தொகுதியில் களமிறங்கி உள்ளார்.

என்ன நடந்தது

பாரீசில் நடந்தது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாரீசில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. பி.டி.உஷா என்னை சந்தித்தார். அப்போது ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். அதுபோல், பாரீசிலும் அரசியல் நடந்தது. இதனால் எனது மனம் உடைந்தது. மல்யுத்தத்தை விட வேண்டாம் என பலர் கூறினர். ஆனால், எதற்காக நான் அதனை தொடர வேண்டும். அனைத்து இடங்களிலும் அரசியல் உள்ளது.

இது சரியா

நான் மருத்துவமனையில் இருந்த போது வெளியில் என்ன நடந்தது என தெரியவில்லை. வாழ்க்கையில் கடினமான கட்டத்தை கடந்து கொண்டு இருந்தேன். அப்போது, எனக்கு ஆதரவு தருவது போல் உலகத்திற்கு காட்டுவதற்காக, பி.டி.உஷா என்னிடம் அனுமதி கேட்காமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து, நான் உங்களுடன் இருக்கிறேன் எனக்கூறுகிறார். இப்படியா ஒருவர் ஆதரவு தருவார்கள். இது வெறும் நடிப்பு. சரியான நடவடிக்கை இல்லை. இவ்வாறு வினேஷ் போகத் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

Raj
செப் 12, 2024 22:28

போங்கடா நீங்க என்ன புதிசா நியாயம் பேசி கிழிச்சிங்க


Raj
செப் 12, 2024 22:26

பிராடு வேலை பண்ற வரைக்கும் கூட போன அதிகாரிகள் என்ன ப வேலை பார்த்தாங்க....பிராடு... ஒரு வேளை பிஜேபி கட்சியில் சேர்ந்து இருந்தால். ஆஹா.. என்னடா உங்க நியாயம்


Raj
செப் 12, 2024 22:23

இந்த பெண் ஒரு வேளை பிஜேபி கட்சியில் சேர்ந்து இருந்தால்..... இவர் நல்லவர் ஆஹா...


என்றும் இந்தியன்
செப் 12, 2024 16:11

ராகுல் காந்தி கட்சியில் சேர்ந்தாச்சின்னா அவர்களுக்கு பெரிய பதவி வேண்டுமென்றால் இது தான் முதல் படி???எதிலும் எப்போதும் எவ்வழியிலும் குறை குறை குறை ஒன்றே சொல்லவேண்டும் காங்கிரஸ் தவிர்த்து மற்ற எல்லா கட்சிகளின் மீது அதுவும் பிஜேபி மோடி மீது காலை எழுந்தவுடன் முதல் குறை சொல்ல ஆரம்பிக்க வேண்டும் என்று கண்டிஷன்


karthik
செப் 12, 2024 12:43

விளையாட்டிற்கு கொஞ்சம் கூட தகுதி இல்லாத நபர் இவர். இவரின் நடவடிக்கையே காட்டிக்கொடுத்துவிட்டது இவர் போலியானவர் இவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டும் பொய் என்று. போலியானவர்களை காங்கிரஸ் எப்பொதும் கைவிடாது என்பதை காங்கிரஸ் மீண்டும் நிரூபித்திருக்கிறது.


vidhu
செப் 11, 2024 17:06

இவருக்காகவா எல்லாரும் வருத்தப்பட்டோம். அவமானமா இருக்கு. கான்கிரஸ் கைக்கூலி


karthik
செப் 12, 2024 12:43

இப்போதாவது காங்கிரஸ் கட்சி பற்றி தெரிந்துகொண்டீர்களே..


Priyan
செப் 11, 2024 16:06

கொஞ்சம் கூட நியாயம் இல்லாத கருத்து. அவர் போட்டியிட்டது அவர் எப்போதும் போட்டியிடும் எடை பிரிவில் இல்லை. அவரது எடை பிரிவில் தகுதி இல்லாத முதல் சுற்றிலேயே வெளியேறிய ஒருவரை தான் அனுப்பி இருந்தார்கள். தான் எப்போதும் போட்டியிடும் எடை பிரிவில் இருந்து குறைவான எடை பிரிவிலேயே அவர் கலந்து கொண்டார். சிறப்பாக போட்டியிட்டு இறுதி போட்டி வரை வந்தார். அவருடைய எடை நூறு கிராம் அதிகமான காரணத்தினால் தான் அவர் வெளியேற்ற பட்டார். ஒரு வீராங்கனை போட்டியில் வெல்வதில் தான் முனைப்பாக இருப்பார். எடை போன்ற விவகாரங்களை அவருடன் சென்ற மருத்துவ குழுவும் மற்ற அதிகாரிகாரிங்களும் தான் கவனித்து இருக்க வேண்டும். அநியாயமாக வென்ற ஒரு பதக்கத்தை இழந்த அவரை குறை சொல்வதை விட்டு விட்டு சுற்றுலா சென்ற அதிகாரிங்களை கேள்வி கேளுங்கள்


Sathyanarayanan Sathyasekaren
செப் 11, 2024 18:12

ஆஹா என்னஒரு கொத்தடிமை நியாயம்? எடை குறைவான பிரிவில் ஏன் கலந்துகொள்ளவேண்டும்? அப்பிரிவில் தேர்வுபெற்ற மற்றொரு வீரரின் வாய்ப்பை இவரது அரசியல் சூழ்ச்சியால் தட்டிப்பறித்தது தவறுதானே? 100கிராம் அல்ல 2 கிலோ 100 கிராம். 2 கிலோ வழக்கமான அல்லவன்ஸ் அதற்கும் மேலே 100 கிராம் அதிமாக இருந்தார். சும்மா சப்பைக்கட்டு கட்ட வேண்டாம் . இவளது கேவலமான அரசியல் ஆசைக்காக மக்களின் வரி பணத்தை வீணடித்த..


sankar
செப் 11, 2024 15:46

ராகுலுக்கு பொருத்தமான புளுகுமூட்டை இதுதான்


Ramesh
செப் 11, 2024 15:45

கேரள மக்கள் சூடு சொரணை வெட்க்கம் மானம் இதில் ஏதாவது ஒன்று இருந்தால் தங்களுடைய தங்க மகளை தகுதியில்லாத ஒரு இந்திகாரி இப்படி காரி துப்புவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்


Sathyanarayanan Sathyasekaren
செப் 11, 2024 18:14

எதற்கு எடுத்தாலும் மணில பிரிவினை, மொழி பிரிவினை, ஜாதி பிரிவினை, மத பிரிவினை. வெறுப்பை தூண்டுவதே திருட்டு திராவிட கொத்தடிமைகள் வழக்கம். யாரையுமே ஒரு இந்தியன் என்ற கண்ணோட்டத்தோடு முடியாதா ?


RADHAKRISHNAN
செப் 11, 2024 15:42

இவர்ஒரு அரசியல் கழிவு இவருக்கு நாம் அனுதாபபட்டது தவறு, சரியான நாடகக்கோஷ்ட்டி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை