உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்

ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இண்டியா கூட்டணியை சேர்ந்த சில கட்சி தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்து வரும் நிலையில், 'ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது' என பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சித்துள்ளார்.இண்டியா கூட்டணியை சேர்ந்த ஆம்ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் அமலாக்கத்துறை பிடியில் உள்ளனர். இதில் சட்டவிரோத நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு, நில அபகரிப்பு வழக்குகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா தலைவரும் முதல்வருமான ஹேமந்த் சோரனுக்கு 9வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. டில்லி சென்ற அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றபோது அவர் டில்லி இல்லத்தில் இல்லாமல் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. அதேபோல் ஆம்ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். இது தொடர்பாக பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறுகையில், ''ஊழல், இண்டியா கூட்டணியின் பசை போன்றது. ஜார்க்கண்ட் முதல்வர் தலைமறைவாகிவிட்டார், ஆஜராகி அமலாக்கத்துறை கேள்விக்கு பதிலளிக்க சம்மன் அனுப்பப்பட்ட டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையையே கேள்வி எழுப்புகிறார். திரிணமுல் காங்., தலைவர் ஷேக் ஷாஜகான் மத்திய அரசு அதிகாரிகளை தாக்குகிறார்'' என விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

K.Ramakrishnan
ஜன 30, 2024 19:38

சரிங்க... இண்டியா கூட்டணியின் காரணகர்த்தாவே நிதிஷ்குமார் தான்.. அவர் கூட சேர்ந்து ஏன் பீகாரில் ஆட்சி அமைச்சீங்க... மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் மீது நீங்களே ஊழல் புகார் கூறினீங்க.. தேசியவாத காங்கிரஸில் இருந்து அவரை ஏன் இழுத்தீங்க... உங்க கூட சேர்ந்துட்டா... புனிதர் ஆகி விடுவார்களோ?


ramesh
ஜன 30, 2024 17:36

பிஜேபி ஆட்சி மாறும் பொது இதே அமலாக்க துறை மூலம் பிஜேபி மந்திரிகளை உருட்டி உருட்டி எடுக்கும் .மேலே இருப்பவன் ஒருநாள் கீழே வந்து தானே ஆக வேண்டும்


duruvasar
ஜன 30, 2024 15:11

ஓடி ஒளியேரானுகோ , இல்லாவிட்டால் ஆஸ்பத்திரியில் பொய் படுத்துகிறானுங்கோ இதில்லியிருந்தேய இவங்களை பத்தி தெரியவில்லையா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 13:02

நித்திசு ரொம்ப யோக்கியருங்களா ??


Palanisamy Sekar
ஜன 30, 2024 12:36

இந்திய கூட்டணியில் உள்ள கட்சியினரின் ஒருவராவது நான் யோக்கியன்..ஊழலே செய்யத உத்தமன் என்று முன்வந்து மக்கள்முன்னிலையில் சொல்லுகின்ற தில் இருக்கின்றதா? மகன் மட்டுமல்ல மருமகன்கள் மீதும் கூட ஊழல் வழக்கு உள்ளதே..இது பசையால் ஒட்டிக்கொண்டுள்ள கூட்டணி அல்ல..இது பண பயத்தால் ஒட்டிக்கொண்டிருக்கும் விவரங்கெட்ட கூட்டணி..தேசத்துக்கு ஆபத்தான கூட்டணி..


Sampath Kumar
ஜன 30, 2024 12:22

விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் முதல் இடம் உங்க பிஜேபி கட்சி தான் போவியா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 13:03

மெரினா வில் நிரந்தர உறக்கத்தில் இருக்கும் உன் தலைவனே விஞ்ஞான ஊழல் மன்னன் .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை