உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உண்மை அடிப்படையில் நாட்டை இயக்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

உண்மை அடிப்படையில் நாட்டை இயக்க வேண்டும்: சொல்கிறார் ராகுல்

புதுடில்லி: '' பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது. உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயக்க வேண்டும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.குஜராத்தை சேர்ந்த நாளிதழின் இணை நிறுவனர் பாகுபலி ஷாவை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குஜராத் மாநில பா.ஜ, மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்து லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: குஜராத் நாளிதழின் குரலை ஒடுக்குவது என்பது, ஒரு நாளிதழை மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கு நடக்கும் சதியாகும். நாளிதழுக்கு உள்ள உரிமையை முடக்குவது என்பது ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதை காட்டுகிறது. பாகுபலி ஷா கைது செய்யப்பட்டு உள்ளது, பயம் கலந்த அரசியலின் ஒரு அங்கம் ஆகும். இது மோடி அரசின் அடையாளம். பயத்தை வைத்து நாட்டை இயக்கக்கூடாது. உண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நாடு இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Dr.C.S.Rangarajan
மே 17, 2025 22:17

எத்தனை விதமான நடந்தவைகள், நடப்பவைகள், நடக்க போகக்கூடியவைகள் என்று ஆலமரத்தடியில் இல்லாது போனாலும் துப்பறியும் சாம்புபோல் ஏக்கர் கணக்கில் தங்கு தடை இன்றி அளவுகோல் இன்றி அளந்து விடும் ஜோசியர்கள் பெருகிப்போனது எதனால்?பாரதியாரின் கவிதையினை சிறு மாற்றங்களுடன் படித்தால் ஜௌர்னலிஸ்ட் என்றும் அரசியல்வாதிகள் என்றும் பசு தோல் போர்த்திய புலிகளுக்கு பொருந்துமோ பொய் சொல்லக்கூடாது பாப்பா என்றும் புறம் சொல்லலாகாது பாப்பா பொய் சொன்னால் தெய்வம் நமக்கு துணை இருக்காது  பாப்பா.


surya krishna
மே 17, 2025 11:21

வந்துட்டாயா இத்தாலிக்காரர் Raul


பேசும் தமிழன்
மே 17, 2025 09:07

அப்படியானால் உங்களை போல் திருட்டுத்தனமாக அல்லாமல் நாட்டை நடத்த வேண்டும்.... அப்படி தானே..... அதை எங்கள் நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் செவ்வனே செய்து வருகிறார்..... நீங்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.... நீங்கள் பட்டாயா போய் குதூகலமாக இருக்கலாம்.


shyamnats
மே 17, 2025 08:42

இவரது குடும்பத்தின் வாரிசுகளின் -காந்தி யாவது - பற்றிய உண்மையை உரக்க சொல்வாரா?


ராமகிருஷ்ணன்
மே 17, 2025 07:47

எந்த உண்மை அடிப்படையாக எடுத்து கொள்ளனும் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை விட மோசமான முஸ்லிம் காங்கிரஸ், இந்திய இந்துகளுக்கு செய்த துரோகங்களை அடிப்படையாக வைத்து நாட்டை இயக்க வேண்டும், சரிதானே.


V Venkatachalam
மே 16, 2025 22:30

ஆரம்பிச்சுட்டாங்கய்யா.ஆரம்பிச்சுட்டாங்க. நாலு நாட்கள் எங்க இருந்தாங்கன்னே தெரியல. இவனோட அலப்பறைய இனிமே தினமும் பிடிக்குமா? இப்பவே கண்ணைக் கட்டுதே..


theruvasagan
மே 16, 2025 22:19

எல்லாருக்கும் அப்படி நடக்குமா.


Srinivasan Ramabhadran
மே 16, 2025 21:40

அது சரி. இவர் கட்சி ஏன் துருக்கி நாட்டில் கட்சி அலுவலகம் தொடங்கியது.


Anbuselvan
மே 16, 2025 21:31

உண்மைக்கும் மேலாக இருக்கும் தர்மத்தின் அடிப்படையில் இந்த நாடு கடந்த 11 ஆண்டுகளாக இயங்கி கொண்டு இருக்கிறது. வாழ்க பாரதம்.


ManiK
மே 16, 2025 21:15

ராவுல் சகோதரர்களுக்கு 4 நாட்கள் விழுந்த அடி அப்படி....பயம் இல்லாம இருக்குமா?!!


புதிய வீடியோ