உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடாதீங்க": பெற்றோருக்கு பிரதமர் மோடி "அட்வைஸ்"

"தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடாதீங்க": பெற்றோருக்கு பிரதமர் மோடி "அட்வைஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛தன் குழந்தையை மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடக்கூடாது. அது அவர்களின் எதிர்காலத்திற்கு கேடு விளைவிக்கும்'' என பெற்றோர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். தேர்வு நேரத்தில் எழும் பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகளை எப்படி எதிர்கொள்வது குறித்து, டில்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்து உரையாடினார். தேர்வு நெருங்கும் நேரத்தில், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடிபங்கேற்று பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

விசிட்டிங் கார்டு

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒரு போதும் ஒப்பிடக்கூடாது. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் அட்டையை விசிட்டிங் கார்டாக கருதுகின்றனர். வாழ்க்கையில் போட்டிகள் இருக்க வேண்டும். மாணவர்கள் மற்றவர்களோடு போட்டி போடாமல் தங்களோடு தாங்களே போட்டி போட வேண்டும்.

உறவு முறை

ஆசிரியர்கள் தங்கள் வேலையை வெறும் வேலையாக எடுத்துக்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்களிடம் வெளிப்படையாக விவாதிக்கும் வகையில் உறவு முறை இருக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களை பிரச்னைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், மாணவர்கள் எழுச்சி பெறுவார்கள்.

முக்கிய பங்கு

தேர்வு குறித்த மன அழுத்தத்தை மாணவர்கள், அவரது குடும்பம் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றாகக் கையாள வேண்டும். வாழ்க்கையில் சவாலும் போட்டியும் இல்லாவிட்டால், வாழ்க்கை உற்சாகமாக இருக்காது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே எப்போதும் நல்லுறவு இருக்க வேண்டும்.

மன உறுதி

பிறர் கூறும் குறைகளை வைத்து, தன் குழந்தைகள் குறித்து தவறாக நினைக்காதீர்கள். அது அவர்களின் மன நலனைப் பாதிக்கிறது. அது நல்லதை விட தீமையே அதிகம் செய்கிறது. இது மாணவர்களின் மன உறுதியையும் நம்பிக்கையையும் குறைத்து விடும். மாணவர்களுடன் சரியான உரையாடல் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ramesh Sargam
ஜன 30, 2024 00:47

மாணவர்களுடன் சரியான உரையாடல் மூலம் பிரச்னைகளைத் தீர்ப்பதை உறுதி செய்ய வேண்டும். யாரும், யாருடனும் ஒப்பிடுவது சரியல்ல. சரியாகத்தான் மோடி அவர்கள் கூறி இருக்கிறார்.


K.Ramakrishnan
ஜன 29, 2024 19:58

தன்குழந்தையை பிற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது.. சரி சார்.. நீங்க எதுக்கெடுத்தாலும், கடந்த 70 வருஷமா... அதைச் செய்யலை...இதைச் செய்யலை... நான் வந்தபிறகு தான் இந்தியாவே வளம் பெறுது.... இதெல்லாம் நிறைவேற்றினேன்.... என்று பிற ஆட்சிகளை ஒப்பிட்டு குறை சொல்வது சரியா... பிரதமர் அவர்களே..


Sathyasekaren Sathyanarayanana
ஜன 30, 2024 06:03

அட கொத்தடிமை ராமகிருஷ்ணா, கொஞ்சம் கண்களை திறந்து பார். பீஜே பி ஆட்சிக்கு வந்த பின் பாரதம் எப்படி இருக்கிறது என்று.


Murali Krishnan
ஜன 29, 2024 19:46

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தையை பேணி காக்க ஒரு ஆலோசராக நமது பிரதமர் விளங்குகிறார்.


அசோகன்
ஜன 29, 2024 16:58

மிக சரியான மனநலம் காக்கும் கருத்து.......இங்கே உள்ள உபிகளுக்கு எங்கே புரிய போகிறது......சாராயம் பிரியாணி வாங்கி மட்டையாக தெரியும் அவ்வளவுதான்


Kanakala Subbudu
ஜன 29, 2024 16:21

நீட் தேர்வு மட்டும் எதற்கு ரத்து செய்ய வேண்டும். எல்லா தேர்வையும் ரத்து செய்து விடுவோம். அலுவலகங்களில் பதவி உயர்வுக்கு கூட தேர்வு கூடாது. டெஸ்ட் எல்லாவற்றையும் நிறுத்தி விடுவோம். விளையாட்டிலும் போட்டின வேண்டாம்.


Priyan Vadanad
ஜன 29, 2024 16:15

மிக மிக அற்புதமான கருத்து. உலகில் எந்த கல்வியாளர்களுக்கோ அல்லது உளவியலாளர்களுக்கோ இப்படிப்பட்ட கருத்து வந்திருக்குமா?


PR Makudeswaran
ஜன 29, 2024 15:29

ஆக்க பூர்வமான கருத்து.


PR Makudeswaran
ஜன 29, 2024 15:28

அறிவும் திறமையும் நிறைந்த கருத்து.


Gopalan
ஜன 29, 2024 15:13

எதிர்காலத்தில் மாணவர்களிடையே உள்ள வேறுபாடுகளை களைய தேர்வு மதிப்பெண் முறை ரத்து செய்யப்படுமா?


Narayanan Muthu
ஜன 29, 2024 15:05

அதாவது இவருடைய ஆட்சியை மற்ற பிரதமர் ஆட்சியுடன் ஒப்பிடாதீர்கள்ன்னு சொல்றார். அப்படி ஒப்பிட்டால் அம்பேல்தான்


hari
ஜன 29, 2024 17:54

நல்ல வளர்திருக்காங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை