உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதித்தது ஏன்? டில்லி ஐகோர்ட் கேள்வி

விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதித்தது ஏன்? டில்லி ஐகோர்ட் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பிரச்னை காலகட்டங்களில், விமான நிறுவனங்கள் 40 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது ஏன்?'' என மத்திய அரசிடம் டில்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில் விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது. இதனால், கடும் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கான பயணிகள் போராட்டத்தில் இறங்கினர். விமான சேவை ரத்து ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பிற விமான நிறுவனங்களின் பயணக் கட்டணமும் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போனது. விமானக் கட்டணம் ரூ.40 ஆயிரம் வரை அதிகரித்தது.இந்நிலையில், விமானக் கட்டண உயர்வு தொடர்பாக டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கடேலா கூறியதாவது; பிரச்னை ஏற்பட்டால், அதனை மற்ற விமான நிறுவனங்கள் எப்படி சாதகமாக பயன்படுத்த முடியும்? விமான கட்டணங்களை 35 ஆயிரம் ரூபாய் முதல் 39 ஆயிரம் வரை எப்படி உயர்ந்தது? மற்ற விமான நிறுவனங்கள் எப்படி கட்டணத்தை உயர்த்தின? இதற்கு எப்படி அனுமதி கிடைத்தது? எனக்கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா, மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.இதன் பிறகு நீதிபதி கூறியதாவது: பிரச்னை ஏற்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. திடீரென பிரச்னை ஏற்பட்டது ஏன் என்பதே கேள்வி? அதனை தடுக்கநீங்கள் என்ன செய்தீர்கள் எனக்கேள்வி எழுப்பினார். மேலும், விமானிகள் கூடுதல் நேரம் பணியாற்ற மத்திய அரசு அனுமதித்தது ஏன்? அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் கேள்வி எழுப்பினார்.அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் கூறுகையில், இண்டிகோ நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டுடிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து நீதிபதி கூறுகையில்,மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். இத்தகைய சூழ்நிலை ஏற்பட அனுமதிக்கப்பட்டது மற்றும் விமான நிலையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் உதவியில்லாமல் தவித்த விஷயம் கவலை அளிக்கிறது. இந்த சூழ்நிலை பயணிகளுக்கு அசவுகர்யத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்தது. பொருளாதாரம் துடிப்பாக இயங்க, பயணிகள் வேகமாக நகர்ந்து செல்வது முக்கியம். பயணிகளுக்கு இழப்பீடு வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் ஊழியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Barakat Ali
டிச 10, 2025 20:09

விமான நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றிருக்க வாய்ப்பு .........


Gokul Krishnan
டிச 10, 2025 18:43

சீனாவில் அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்ய முடியாது.


உண்மை கசக்கும்
டிச 10, 2025 17:38

எங்க ஊர் திராவிடிய தனியார் பேருந்து கொள்ளைகாரர்கள் அடிக்கும் கொள்ளையை உங்க நீதிமன்றங்களால் நிறுத்த முடியுமா


ராஜ்
டிச 10, 2025 17:22

ஐயாயிரம் ரூபாய் பயண கட்டணத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர் மற்ற விமான நிறுவனங்கள். அதிக கட்டணம் வசூலித்ததை திருப்பிக் கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.


Priyan Vadanad
டிச 10, 2025 17:17

இண்டிகோவுக்கு அடி தேவைதான். ஆனால் அடிமாடாக்கும் அடி தேவையில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.


Premanathan S
டிச 10, 2025 17:14

பழைய MGR படங்களில் அவர் சண்டை போட்டு வில்லன்களை பிடித்து வைத்த பின் போலீஸ் வந்து மிரட்டி அழைத்து செல்லும் அது மாதிரி பிரச்னை பாத்து நாளா நடந்தும் என்னைப்போல் கிராமத்தானே கேள்விப்பட்டு, கோபப்பட்டும், இப்போது கேள்வி கேட்க வந்திருக்கும் சட்டம்


Nathansamwi
டிச 10, 2025 16:34

அதுக்க்கும் ஜிஎஸ்டி


Ramalingam Shanmugam
டிச 10, 2025 16:03

நிலையான கட்டணம் வசூலிக்க பட வேண்டும் அப்போ தான் முன்னேறும்


சமீபத்திய செய்தி