உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை மாவட்ட அளவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்,'' என தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தப் பணியில் 65 லட்சம் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ஏதும் இல்லை எனவும், அவர்களது பெயர் நீக்கப்பட்டதாகவும் தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.இதனை விசாரித்த நீதிமன்றம் ,'' நீக்கப்பட்ட 65 லட்சம் பெயர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. அப்படி 22 லட்சம் பேர் இறந்து இருந்தால், பூத் அளவில் அவர்களது பெயர்களை வெளியிடாதது ஏன்? பொது மக்களின் உரிமைகள் அரசியல் கட்சிகள் இடையே சிக்கிக் கொள்வதை விரும்பவில்லை.தேர்தல் கமிஷனின் வாதத்தை விரிவாக கேட்டோம். அப்போது சில நடவடிக்கைகளை ஏற்பதாக கூறியுள்ளது. அதில் இடைக்கால நடவடிக்கையாக கீழ்கண்டவற்றை தேர்தல் கமிஷன் பின்பற்ற வேண்டும். இதன்படி 2025 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, வரைவு பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் பெயர்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ