உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்; நிபுணர் கூறுவது இதுதான்!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு காரணம் என்னவாக இருக்கும்; நிபுணர் கூறுவது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு இன்ஜின் கோளாறை காட்டிலும், வேறு பல காரணங்கள் இருக்கலாம் என மூத்த விமானி ஸ்டீவ் கூறியுள்ளார்.குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு ஏர் இந்தியாவின் 'போயிங்' 787-8' ரக 'ட்ரீம் லைனர்' இரட்டை இன்ஜின் விமானம், நேற்று மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டது. 30 வினாடிகளில் இந்த விமானம், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் பயணித்தவர்கள், விழுந்த இடத்தில் இருந்தவர்கள், விடுதி மாணவர்கள் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்து தொடர்பாக, பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து நிபுணரும், அனுபவம் வாய்ந்த விமானியுமான ஸ்டீவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இவர் போயிங் 787-8 டிரீம் லைனர் மற்றும் போயிங் 777 ரக விமானங்களை இயக்கிய அனுபவம் அவருக்கு உள்ளது.அந்த வீடியோவில் ஸ்டீவ் கூறியுள்ளதாவது: இந்த விமானத்தில், ஈர்ப்பு விசையை எதிர்க்கும் 'லிப்ட்' செயல் இழந்ததற்கு 3 காரணங்கள் சொல்லப்படுகின்றன. (லிப்ட் என்பது புவியீர்ப்பு விசைக்கு எதிராக விமானத்தை மேலே உயர பறக்கச் செய்வதற்கான திறன்.)விமானத்தை மேலே பறக்க செய்யும் போது பயன்படும் 'பிளாப்' நிலைகள் குறித்து பலவித கணிப்புகள் வருகின்றன. (பிளாப் என்பவை விமானத்தின் இறக்கைகளின் ஓரத்தில் இருக்கும் கருவி. இவை குறைந்த வேகத்தில் விமானம் பறக்கும்போது, உயர செல்வதற்கான உந்து சக்தியை தருபவை. விமானம் தரையிறங்கும்போதும், மேலே கிளம்பும் போதும், இதன் பங்கு முக்கியம் வாய்ந்தவை.) விமானம் இருந்த உயரத்தில் இருந்து அதனை கணிக்க முடியாது. போயிங் 777 ரக விமானங்களை காட்டிலும் போயிங் 787 ரக விமானங்கள் திறன் வாய்ந்தவை. இந்த விமானத்தில் எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை.விமானத்தில் இருந்த இரண்டு இன்ஜின்களும், உந்து விசையை உருவாக்குகின்றனவா என தெரியவில்லை. தீப்பொறி, தீப்பிழம்பு ஏதும் இல்லை. வழக்கமாக இயங்கவில்லை என்பதற்கான அறிகுறியையும் காட்டவில்லை. விமானத்தில் 'லிப்ட்' திறன் தோல்வி ஏற்பட்டு உள்ளது. இதற்கு மின்சாரம் துண்டிப்பு காரணமாக இருக்கலாம். 'லிப்ட்' தோல்வியால், விமானம் பறப்பதை நிறுத்திவிட்டது என்பது முக்கியமான கருத்து.இரண்டு இன்ஜின்களும் பழுதடைந்து இருந்தால், அதற்கு பறவைகள் மோதல் காரணமாக இருக்கலாம். ஆனால், வீடியோவில் அப்படி ஏதும் பார்க்க முடியவில்லை. இன்ஜின்களில் இருந்தும் எந்த தீப்பிழம்பும் இல்லை.எரிபொருள் கலப்படம் என்பது மற்றொரு சாத்தியக்கூறு. இரண்டு இன்ஜின்களும் எரிபொருள் பகிரப்பட்ட இருந்தன. அப்போது எந்த பிரச்னையும் இல்லை. அனைத்தும் சுமுகமாக உள்ள நிலையில் இயந்திர பிரச்னையாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.மற்றொரு காரணம், துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் 'பிளாப்'பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன். அப்படி நடந்து இருந்தால், விமானம் பறப்பது நின்று இருக்கும். அந்த நேரத்தில் இறக்கைகளுக்கு மேல் உள்ள 'லிப்ட்' செயல் இழந்திருக்கும்.விமானம் திடீரென வேகத்தை இழந்ததும், உயரத்தையும் விமானி இழந்திருக்கிறார். விசாரணை முடிவில் முழுமையான விவரங்கள் தெரியவரும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

mohan
ஜூன் 16, 2025 19:17

பெட்ரோலில் மண் கலந்திருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆழ்ந்த விசாரணை தேவை.


கோகுல்
ஜூன் 14, 2025 13:09

black box தகவலின் படி may day, no power னு சொல்லி இருக்காங்க...


pmsamy
ஜூன் 14, 2025 10:01

உண்மையான காரணத்தை மக்களுக்கு சொல்லும் பழக்கம் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு இருந்தது இல்லை. நீ சொல்ற கதை எல்லாம் கேட்க வேற ஆளை பார் போடா


Manimaran
ஜூன் 14, 2025 06:17

மின்சாரம் துண்டிப்பு காரணமாக இருக்கலாம் என்ற இவரது கருத்தையும் டெல்லியில் இருந்து இதே விமானத்தில் வந்த பயணி ஒருவர் அனுப்பிய காணொளியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்...


Parthasarathy
ஜூன் 14, 2025 05:39

உணர்ச்சி வச படாதீர்கள். மனித இயக்கம் மாபெரும் காரணமாக இருக்கலாம். நேற்று வரை பயணித்த விமானம் இன்று இந்த மாதிரி பேசிக் தவறு வராது. நாடு வானில் விபத்து ஏற்பட்டால் நீங்கள் சொல்வது மாதிரி விமான கோளாறாக இருக்கலாம். நான் முப்பது வருடங்களாக கார் ஓட்டுகிறேன். ஆனால் ஒரு நாளில் பிரேக் பிடிப்பதற்கு பதில் அக்ஸிலரேட்டரை மிதித்து விட்டேன். நல்ல காலம் சுவற்றில் கார் படார் என்று மோதியது. எல்லாமே நடந்தது அரை நொடியில். முப்பது வருட அனுபவம் என்ன ஆகியது? காரை குறை சொல்ல முடியுமா? என்னதான் ஓட்டை காராக இருந்தாலும் காரை எடுக்கும் போது காரை குறை சொல்ல முடியாது. நீண்ட நேர பயணத்தில் கார் பழுதானால் ஓட்டை கார் என்று சொல்லலாம். எனக்கும் இதே சந்தேகம் தான் இருந்தது. பைலட் செயல்பாடு என்பது பெயர். சில விஷயம் நாம் தான் செய்ய வேண்டும். விமானத்தில் நான் பிரேக் மிக்கது போல் வேறு ஒரு சிறிய தவறு நடந்து அது பெரிய விபத்தாக மாறி இருக்கலாம் அல்லவா? டாடா நிர்வாகமும் இந்த விபத்துக்கு தார்மக பொறுப்பு ஏற்றுள்ளதே. இதற்கு மேல் எல்லாம் நடந்த பிறகு என்ன செய்ய முடியும். யாருக்கு தண்டனை கொடுக்க முடியும். தவறு செய்தவரும் இறந்து பொய் விட்டார்களே. ஒரு கடமை உள்ள குடிமகனாக யோசியுங்கள். சும்மா உணர்ச்சி வசப்படாதீர்கள். இந்த விமானம் இதுவரை எந்த பெரிய விதத்திலும் சிக்கியதில்லை. இந்த விமானமும் கடந்த பத்து வருடமாக ஓடி கொண்டு இருக்கிறது. சில சிறிய சவுண்ட் வரலாம். இது மாதிரி பெரிய தவறு இல்லை. இந்த விமானம் தினமும் ஓடுகிறது வேறு. தயவு செய்து வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.


ராஜா
ஜூன் 13, 2025 23:59

Company will say human error is the result


THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
ஜூன் 13, 2025 22:36

"துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் பிளாப்பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன்." என்று செய்தியில் சொல்லப்படுகிறது. விமானிகள் இருவரும் 8000 மணிநேரம், 1000 மணிநேரம் பறந்து அனுபவம் உள்ளவர்கள் இப்படிப்பட்டவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் போல எந்தக் கருவியாய் உயர்த்த வேண்டும், எந்தக் கருவியாய் தாழ்த்த வேண்டும் என்பது எப்படித் தெரியாமல் போய்விடும்? விமானிகள் இந்தமாதிரித் தவறைச் செய்திருக்க மாட்டார்கள்.


கல்யாணராமன்
ஜூன் 13, 2025 22:34

எல்லோரும் செத்து போய்விட்ட பின் யாரிடம் விசாரணை நடத்துவீர்கள்?


Sudha
ஜூன் 13, 2025 20:13

சுருக்கமாக சொன்னால் அமெரிக்கா போயிங் மீது எந்த தவறு இல்லை. இந்திய விமானி மீது பழியை போடுங்க. ஊருக்கு இளைச்சவன்


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூன் 13, 2025 20:02

துணை விமானியை கியரை உரிய நேரத்தில் உயர்த்தும்படி விமானி கூறியிருப்பார். ஆனால், துணை விமானி பிளாப் ஹேண்டிலை பிடித்ததுடன், கியருக்கு பதில் பிளாப்பை உயர்த்தியிருப்பார் என நினைக்கிறேன். அப்படி நடந்து இருந்தால், விமானம் பறப்பது நின்று இருக்கும். அந்த நேரத்தில் இறக்கைகளுக்கு மேல் உள்ள லிப்ட் செயல் இழந்திருக்கும். விமானம் திடீரென வேகத்தை இழந்ததும், உயரத்தையும் விமானி இழந்திருக்கிறார். ஆனால் இதுபோன்ற குழந்தைத்தனமான தவறுகளை விமானத்தின் தொழில்நுட்பம் அனுமதிக்காது என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.


ديفيد رافائيل
ஜூன் 13, 2025 21:47

Flap என்பது pilot manually operate பண்ண கூடியது.


புதிய வீடியோ