உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., எம்.பி.,க்கள் தாக்குதலில் எனக்கும் கால் மூட்டில் காயம்; காங் தலைவர் கார்கே புகார்

பா.ஜ., எம்.பி.,க்கள் தாக்குதலில் எனக்கும் கால் மூட்டில் காயம்; காங் தலைவர் கார்கே புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., எம்.பி.க்கள் தள்ளியதால் கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் ஏற்பட்ட மோதலில் பா.ஜ.,வை சேர்ந்த ஒடிசா எம்.பி., சாரங்கி மண்டை உடைந்தது. இன்னொரு பா.ஜ., எம்.பி., முகேஷ் ராஜ்புத் என்பவரும் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு டில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=crmkz7qg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ஜ., எம்.பி.க்கள் தள்ளியதால் கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கார்கே கூறியிருப்பதாவது:இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று (டிச.,19) காலை பேரணியில் ஈடுபட்டபோது பா.ஜ., எம்.பி.க்களால் நான் தள்ளப்பட்டேன். இதனால் நான் தரையில் உட்கார வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்திருக்கும் எனது கால் மூட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கொண்டு வந்த நாற்காலியில் அமர்ந்தேன். மிகுந்த சிரமத்துடன் சக எம்பிக்களின் உதவியுடன் காலை 11 மணிக்கு நான் எனது இல்லத்திற்கு திரும்பினேன். என் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ., எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர விட வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

எவர்கிங்
டிச 20, 2024 10:20

மணி பத்திரம்


சாண்டில்யன்
டிச 19, 2024 22:35

ஒரு பெரிய ரயில் பல பல்டியடிச்சு கவிழ்ந்தாலும் யாரும் சாகலை சிறு காயங்கள் மட்டுமேன்னு செய்தி போடறாங்க.தெரு குழாயடி தள்ளு முள்ளுள்ள கீழே விழுந்தா ICU வில எத்தனை நாளைக்கு வைப்பார்களோ தெரியாது


சாண்டில்யன்
டிச 19, 2024 22:31

இன்னும் யார் யாருக்கு என்னென்ன பாதிப்புன்னு புகார் கொடுக்க வேண்டும்


Perumal Pillai
டிச 19, 2024 22:25

இந்த வயசில் இந்த கோமாளிக்கு இந்த திராவிட மாடல் நடிப்பு தேவையா ?


Bhakt
டிச 19, 2024 21:55

சீக்கிரம் பூட்ட கேஸ் ஆகு மிஸ்டர் கருகே.


P. Siresh
டிச 19, 2024 21:20

கார்கேவிற்கு ஏற்கனவே முட்டியில் அடிதான்.அது இன்று ஏற்பட்டதல்ல


ராமகிருஷ்ணன்
டிச 19, 2024 21:08

மம்மு ஸ்டைல முட்டியில் பெரிய கட்டு போட்டு வீல்சேர்லே வந்து சொல்லுப்பா


முருகன்
டிச 19, 2024 20:35

இதற்கு யார் பொறுப்பு


Saai Sundharamurthy AVK
டிச 19, 2024 20:06

அப்படியா ! உங்களுக்கு ஒரே தீர்வு இது தான். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தான்.


ஸ்ரீ
டிச 19, 2024 19:39

வயதான காலத்தில் மூட்டு வலி வரத்தான் செய்யும்.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை