உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிரியாவுக்கு போகாதீங்க; மத்திய அரசு அறிவுறுத்தல்

சிரியாவுக்கு போகாதீங்க; மத்திய அரசு அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிரியாவில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கிளர்ச்சிப் படைகள், கடந்த ஒரு வாரமாக, சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்தை அகற்றும் நோக்கில், தாக்குதலை நடத்தி வருகின்றன. சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pvklxikw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், சிரியாவில் பயணங்களை தவிர்க்க வேண்டும் என இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை மக்கள் சிரியாவுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் முடிந்த வரை விரைவாக சிரியாவை விட்டு வெளியேறுங்கள். +963993385973 என்ற அவசர கால உதவி எண் மற்றும் hoc.mea.gov.inஎன்ற இ-மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yes your honor
டிச 07, 2024 15:25

நான் பக்கத்தில் இருக்கும் அந்த தெருவிற்கே போவதில்லை. சிரியாவிற்கா போகப்போகிறேன்..


kulandai kannan
டிச 07, 2024 09:46

பட்டினப்பாக்கத்தில் ஒரே ஒரு சுவர் விழுந்த விபத்திற்கு பல மணிநேரம் போக்குவரத்தை மறியல் செய்த கும்பல், காஸா, லெபனான், சிரியாவில் பல்லாயிரம் வீடுகள் தரைமட்டமாக்கியதை எதிர்த்து அங்கு சென்று போராடுவார்களா??


அப்பாவி
டிச 07, 2024 08:31

அங்கேதான் இன்னும்.இந்திய வம்சாவளியினர் போகலை. நல்ல வேலை வாய்ப்பு இருக்காம்.


Chandran,Ooty
டிச 07, 2024 11:37

பாஞ்சி லட்சம் கேட்டு இங்கு பிச்சை எடுப்பவர்கள் அங்கு உள்ள வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.


SUBBU,
டிச 07, 2024 08:28

சிரியாவிற்கு போவதற்கு மத்திய அரசு தடை விதிப்பதற்கு அந்த நாட்டில் சமீபகாலமாக அரசு அதிகாரத்தை யார் கைப்பற்றுவது என்பதற்காக ஏற்பட்டு வரும் கலவரங்கள்தான் காரணம். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் RSB மீடியாக்கள், அல் கொய்தாவுடன் இணைந்து செயல்பட்ட சிரிய நாட்டு HTS பயங்கரவாதிகளை Hayat Tahrir al Sham சிரியாவின் அடுத்த ஆட்சியாளர்களாக கொண்டு வருவதற்கு பகீரத பிரயத்தனம் செய்து வருகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என்கிற ரீதியில் விவாதம் என்ற பெயரில் அவர்களுக்குத்தான் எந்த நாடும் உருப்படுவது பிடிக்காதே எ.கா.உக்ரைன் ஜெலன்ஸ்கி, பங்களாதேஷ் யூனுஸ் அவர்களுக்கு ஜால்ரா அடித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. அவர்களை மக்களின் நன்மைக்காக போரட்டம் செய்த கிளர்ச்சியாளர்கள் என்று சித்தரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பற்றி அங்குள்ள மக்களுக்கு, தலையை வெட்டுவது, பெண்களை கடத்துவது, கற்பழிப்பது, போன்ற கொடூர கொலையாளிகள் என்பது நன்றாக தெரியும். சிரியாவில் துருக்கியின் அடிமையாக இருக்கும் இந்த ஜிஹாதிகளின் ஆட்சி அமைந்தால் அங்குள்ள சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் என்ன கதி ஏற்படும் என்று கலக்கத்தில் உள்ளனர் அந்த நாட்டு மக்கள். சிரியா உலகின் இரண்டாவது ஆப்கானிஸ்தான் என்ற பெயரை விரைவில் பெறப் போகிறது.


ராமகிருஷ்ணன்
டிச 07, 2024 07:40

என்னடா இது சேவு சிரியா கும்பலுக்கு வந்த சோதனை. இங்குள்ளவர்கள் அங்கே போயி பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஒருத்தனும் வாய் திறக்க மாட்டான்


MUTHU
டிச 07, 2024 09:49

hezbollah வலுவாக இருந்தவரையிலும் அவர்கள் லெபனான் தாண்டி சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்தினர். IS அமைப்பை ஒடுக்கி வைத்திருந்தனர். அதனால் சிரிய அதிபர் வளர்ச்சிப்பணிகளில் கவனம் செலுத்தினார். hezbollah சும்மாயில்லாமல் இஸ்ரேல் நாட்டினை சீண்ட அவர்கள் சிரியாவிலும் hezbolla ராணுவ நிலைகளை அடித்து நொறுக்கி விட்டனர். சில மாதங்கள் முன் ரஷ்யா ஏன் இஸ்ரேல் எதிரான நிலைப்பாடு எடுத்தது என்பது இப்பொழுது வாசகர்களுக்கு தெரிந்திருக்கும். இப்பொழுது IS அமைப்பினர் அங்கு திரும்பவும் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த சில ஆண்டுகளாக சிரியா நன்றாக முன்னேறி வந்துள்ளது. இனி குழப்பம் தான். இதனால் உண்டாகும் கொடூரங்களை, குழப்பங்களை, சேதங்களை aljazeera போன்ற டிவி சானல்கள் விரிவாக காட்டாது. பெயரளவில் செய்திகளை காட்டி நிறுத்திவிடும். கிட்டத்தட்ட நமது சன் நெட்ஒர்க் போன்றவை அவை. அவை இஸ்ரேல் செய்யும் தாக்குதல் சேதங்களையே திரும்ப திரும்ப காட்டிக்கொண்டிருக்கும்.


MARI KUMAR
டிச 07, 2024 07:30

சிரியாவுக்கு இந்தியர்கள் போவதை தடுப்பது நல்லது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை