உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

"வழிபாட்டுத் தலங்களை தெய்வீகமாக ஆக்குவோம்": நட்டா விருப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம்'' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.அயோத்தியில் வரும் ஜன.,22ம் தேதி ராமர் கோயிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில்களில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, டில்லியில் விஸ்வாஸ் நகரில் உள்ள பசுபதி நாத் கோயிலில் நட்டா தூய்மைப் பணி மேற்கொண்டார்.

வழிபாட்டுத் தலங்கள்

இது குறித்து அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகத்தின் புனிதமான நிகழ்வு அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும். நாம் அனைவரும் நம்மைச் சுற்றியுள்ள வழிபாட்டுத் தலங்களை சுத்தமாகவும், அழகாகவும், தெய்வீகமாகவும் ஆக்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sampath Kumar
ஜன 19, 2024 10:55

ஏன் இப்போ இருக்கும் கோவில்களில் தெய்வீகம் இல்லியா ? அப்போ கூடி பெருகிட தெய்வீகம் வந்துரும் ? அவனவன் மனா தூய்மை முதலில் வர வேண்டும் அது வந்தாலே போதும் அவன் வீட்டுக்கே ஒரு கோவில் தான் அனால் அது தான் வரவே வரத்து அம்புட்டு சாதனையும் உள்ள அல்லி போட்டுக்கிட்டு தான் கோவிலுக்கு வருகின்றன அப்புறம் அது எப்படி தெய்வீகம் ஆகும்


Ramesh Sargam
ஜன 19, 2024 00:26

கோவில் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் ஒரு வழிபாடாக மக்கள் செய்யவேண்டும்.


g.s,rajan
ஜன 18, 2024 21:43

பூலோக வைகுண்டமாக தெய்வீக சூழ்நிலையில் மிக அருமையாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் கோயிலுக்கு எதிரே திருஷ்டி பரிகாரமாக வைக்கப்பட்டு உள்ள நாத்திகவாதியான பெரியார் சிலை உடனடியாக அகற்றப்படுமா...???


g.s,rajan
ஜன 18, 2024 21:38

நமது நாட்டில் கோயில்கள் எல்லாம் கோடிக்கணக்கில் பணம் கொட்டும் ஒரு அட்சய பாத்திரம் ,கேட்டதெல்லாம் அள்ளிக் கொடுக்கும் ஒரு காமதேனு., மொத்தத்தில் தற்போது கோயில்கள் என்றால் அது பணம் கொழிக்கும் ஒரு நல்ல வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது ....


முருகன்
ஜன 18, 2024 18:46

ஏன் இந்த திடீர் பாசம் என்று மக்கள் நினைக்கின்றனர்


Indhiyan
ஜன 18, 2024 23:26

மக்கள் நினைக்கின்றனரா நீங்கள் மட்டும் நினைக்கின்றீரா? பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டதாக நினைக்குமாம்.


A1Suresh
ஜன 18, 2024 17:15

மக்களை நன்னெறியில் நடத்துபவனை தலைவன் என்பர். மோடிஜி மக்களை நன்னெறியில் நடத்துகிறார். "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்ற புறநானூற்று பாடலுக்கும் ஏற்ப வாழ்கிறார் மோடிஜி. பொலிக பொலிக பொலிக


Velan Iyengaar
ஜன 18, 2024 16:36

குரங்கு ....வியாபாரி... குல்லா...இந்த கதை யார் யாருக்கு தெரியும்


hari
ஜன 18, 2024 17:46

000


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை