உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛காதல், காமம் இல்லை: சிறுமியை பலாத்காரம் செய்த காதலனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் கருத்து

‛காதல், காமம் இல்லை: சிறுமியை பலாத்காரம் செய்த காதலனுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைதான காதலனுக்கு ஜாமின் வழங்கிய மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, இச்சம்பவம் காமத்தால் நடக்கவில்லை. காதலால் தான் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 26 வயதான வாலிபர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்தார். 2020ம் ஆண்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனையடுத்து அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரை தேடிய போலீசார் சிறுமியை கண்டுபிடித்ததுடன், அழைத்து சென்ற காதலனையும் கைது செய்தனர்.அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் விசாரணையின் போது அச்சிறுமி கூறுகையில் ‛‛ விரும்பிதான் வீட்டை விட்டு வெளியேறினேன். தன்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் வாக்குறுதி அளித்துள்ளார். இதனால், வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். மஹாராஷ்டிராவில் வெளியே பல்வேறு இடங்களில் தங்கியிருந்தோம்''. எனக் குறிப்பிட்டு இருந்தார்.இந்நிலையில், காதலன் ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி ஊர்மிலா ஜோஷி பால்கே அளித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: சிறுமி மைனர். ஆனால் விருப்பப்பட்டு தான் வீட்டை விட்டு, காதலனுடன் தங்கியதாக போலீசிடம் சிறுமி கூறியுள்ளார். பாலியல் உறவு சம்பவம் இரண்டு பேருக்கு இடையேயான ஈர்ப்பினால் ஏற்பட்டதாக தெரிகிறது. காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை எனக்கூறிய நீதிபதி காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Radhakrishnan Seetharaman
ஜன 18, 2024 17:32

எல்லாம் இட ஒதுக்கீட்டால் வந்த வினை


Radhakrishnan Seetharaman
ஜன 18, 2024 17:32

ellaam


Raa
ஜன 16, 2024 13:04

இதைவிட மோசமான முன்னூதாரணம் எதுவும் இருக்கப் போவதில்லை. கேவலம். மற்ற நீதிபதிகள், இதை தங்கள் தீர்ப்பின் முன்னூதாரணம் தயவுசெய்து எடுத்துக்கொள்ளவேண்டாம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 14, 2024 09:32

மைனர் சிறுமியை நாசம் செய்த அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை ..... இதனால் தீர்ப்பின் காரணம் புரிகிறது ..... இதில் ஒரு மாபெரும் அவலம் தீர்ப்பைக் கொடுத்தவர் ஒரு பெண் நீதிபதி ...........


J.Isaac
ஜன 13, 2024 23:00

இப்படி எல்லாம் தீர்ப்பு வருவது நாட்டிற்கு சாபங்கள் சமுதாய சீரழிவை கொண்டு வரும்


Saai Sundharamurthy AVK
ஜன 13, 2024 22:29

வர வர நீதித்துறை மீது நம்பிக்கை போய் விட்டது.


Velan Iyengaar
ஜன 13, 2024 22:03

ஒவ்வொரு மாநில இது போன்ற ருசிகர செய்தி எழுதும்போது. எல்லாம் இப்படி இருக்கும்... bj பார்ட்டி ஆளும் மகாராஷ்ட்ராமாவில் உள்ள நாகபூரில்.....இன்னது இன்னது நடந்தது என்று... இங்கு இல்லாத குறையை தான் நன் போக்கினேன் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


Velan Iyengaar
ஜன 13, 2024 21:59

தமிழகத்தில் எது நடந்தாலும் ஆளும்கட்சி மீது பாயும்போதெல்லாம் இனிக்குமா?? இது மட்டும் கசக்குதா??


Velan Iyengaar
ஜன 13, 2024 21:54

எங்கப்பன் குதுருக்குள்ள இல்ல என்பது போல கருத்து கண்ணாயிரம்கள் எப்படி பிராண்டுதுகள் பாருங்க ஏதாவது ஒரு வகையில் என் கருத்து குத்துதா??


Dharmavaan
ஜன 13, 2024 20:43

மடத்தனமான வக்கிரமான தீர்ப்பு.மேஜர் என்றால் 18 வயது.தவறை சிறுவர்களுக்கு சிந்திக்கும் திறன் சரியாக இருக்காது என்பதே அப்போது இந்த காதல் என்பது சரியா.அதுவும் பெண் நீதி போல் தெரிகிறது கேவலம் எங்கு போகிறது நீதித்துறை


G. P. Rajagopalan Raju
ஜன 13, 2024 21:50

இதே நீதி மன்றத்தில் புஷ்பா கணோதிவலா என்ற பெண் நீதிபதி இதே போன்ற சிறப்பு மிக்க ????பல தீர்ப்புகளை வழங்கி உள்ளார்


Velan Iyengaar
ஜன 13, 2024 22:14

bj பார்ட்டி ஆளும் மாநிலங்களில் வக்கிரங்களுக்கு குறையேதும் இருக்காது மேலிருந்து கீழ் வரை வக்கிரம் பிடித்தவர்கள் நிரம்பி வழியும்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ