"மக்கள் சேவையில் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை நாடு மறக்காது": பிரதமர் மோடி பேச்சு
புவனேஸ்வர்: ''மக்கள் சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை நாடு மறக்காது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று(பிப்.,03) ஒடிசா சென்றார். அவர் சம்பல்பூரில் நடந்த விழாவில், ரூ.68,400 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஒடிசா மாநிலத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் ரூ.70,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்காக நான் மனதார வாழ்த்துகிறேன். நாட்டின் சிறந்த மகன்களில் ஒருவரான முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்க இன்று நாடு முடிவு செய்துள்ளது. துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், தகவல் துறை அமைச்சர் மற்றும் ஒளிபரப்பு மற்றும் பல தசாப்தங்களாக அத்வானி நாட்டுக்கு ஆற்றிய சேவை ஈடு இணையற்றது. மக்கள் சேவையில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களை நாடு மறக்காது. அத்வானியின் மக்கள் சேவையை நாடு என்றென்றும் மறப்பதில்லை. அத்வானியின் பாசத்தையும் வழிகாட்டுதலையும் தொடர்ந்து பெற்று வருவது எனது அதிர்ஷ்டம். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்துகிறேன். உத்தரவாதம்
நாட்டின் புதிய பட்ஜெட் இரண்டு நாட்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். பட்ஜெட்டில் ஏழைகளுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்கள் உள்ளது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், அனைவரின் வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட் உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.