உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை": சொல்கிறார் கெஜ்ரிவால்

"குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை": சொல்கிறார் கெஜ்ரிவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது தொடர்பாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் , என் மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரமில்லை என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; என் மீது பொய்யாக புனையப்பட்ட வழக்கு. அமலாக்கத்துறை மூலம் என்னை கைது செய்ய ஆளும் பா.ஜ., முயற்சி செய்கிறது. ஊழல் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உண்மை. எனது மிகப்பெரிய சொத்து எனது நேர்மை. அதை அவர்கள் சிதைக்க விரும்புகிறார்கள். அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி என்னை மிரட்டுகிறார்கள்.பா.ஜ.,வில் சேராத அரசியல் தலைவர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை. எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானது. பா.ஜ., வின் நோக்கம் விசாரிப்பது அல்ல. லோக்சபா தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்க சதி நடக்கிறது. விசாரணை என்ற பேரில் என்னை கைது செய்ய விரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Ramesh Sargam
ஜன 05, 2024 01:35

குற்றச்சாட்டில் ஆதாரமில்லை என்பதை, முதல் சம்மன் வந்தபோதே நீதிமன்றத்திற்கு சென்று கூறி இருக்கவேண்டும். இப்பொழுது நான்காம் முறை சம்மன் வந்தபிறகும், போகாமல், அறிக்கை விட்டு என்ன பயன்? தவறு செய்யாத பட்சத்தில், நேராக நீதிமன்றத்துக்கு செல்ல ஏன் பயப்படுகிறாய்? ஆக, நீ குற்றம் செய்திருக்கிராய். குற்றத்தை ஒப்புக்கொண்டு, தண்டனையை குறைத்துகொள்ளப்பார்.


K.n. Dhasarathan
ஜன 04, 2024 23:01

கெஜ்ரிவால் பிரச்சாரம் கண்டு பொய் ஜே பி அரசு நடுங்குவது ஏன் ? அவரை எப்படியாவது சிக்க வைக்கவேண்டுமென்று இதற்கு முன் பல தடவை முயன்றும் ஒன்றும் கிடைக்காமல் போன ஈ. டி இப்போது வெறித்தனமாக அலைகிறது . கட்சியின் சாதனைகளை சொல்லி ஒட்டு கேளுங்கள், அடுத்த கட்சியை மிரட்டி பணிய வைத்து, விலைக்கு வாங்கி , அல்லது பின் புரா வாசல் வழியே கள்ள உறவு வைத்து கவிழ்ப்பது பொய் ஜே பி கட்சியை அழித்துவிடும் , கர்நாடக போல


Yaro Oruvan
ஜன 04, 2024 19:49

இதையேதான் சிசோடி சொன்னார்... நீ அதையே ரிப்பீட் செய்ற? அப்போ அடுத்து சிசோடி நம்பர் 2.. சரி விடு.. உள்ள போறவரைக்கும் ஏதாவது சொல்லு.. அப்புறம் கால் கொடையுது காத்து கொடையுதுன்னு ஜாமீன் வாங்க புலம்பு.. எங்கூர்ல தொட்டுப்பார் தடவிப்பார்னு கூவீட்டு இப்போ நெஞ்சு வலி வலின்னு சாமீனுக்கு மண்டி போடுறானுவ.. சகவாச தோஷம்


Yaro Oruvan
ஜன 04, 2024 19:43

நான் குற்றம் செய்யவில்லைன்னு சொல்ல மாட்டேங்கிறார்.. ஆதாரம் இல்லை.. சரி அத அமலாக்கத்துறகிட்ட போய் சொல்லுங்க.. கோர்ட்ல சொல்லுங்க.. அத வுட்டுட்டு எதுக்கு பத்திரிக்கையாளர்கிட்ட?? நீங்க யாருன்னு டெல்லி மக்களுக்கு புரிய ஆரம்பித்துவிட்டது.. விளக்கமாத்துக்கு சங்கு சத்தம் கேக்க ஆரம்பிச்சுடுத்து மிஸ்டர் போர்ஜரிவால்.


Siva
ஜன 04, 2024 18:25

நான் குற்றமே செய்யவில்லை என்று சொல்லமாடடேங்கிறான் புரட்டுக்காரன் .. ஆதாரம் இல்லை என்கிறான்


Hari
ஜன 04, 2024 18:04

எங்க பொன்முடியும் அப்படித்தான் சொல்லிக்கிட்டு திரியிறாரு அப்போ இருபதாயிரம் கோடி எப்படி சம்பாரித்தாய் என ஒரே கேள்விதான் கதை முடிந்த்து. அதனால ........


Jysenn
ஜன 04, 2024 18:01

This is the standard statement of all Honourable Tirudargal.


Narayanan
ஜன 04, 2024 16:14

பொய்யான வழக்கு என்றால் ஆஜர் ஆகவேண்டியததுதானே .


Balamurugan
ஜன 04, 2024 16:13

இதை நீதி மன்றத்தில் போயி சொல்லுங்க. சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம் தானே? சாதாரண மக்கள் இவரை போன்று சட்டத்தை உதாசீனப்படுத்தினால் உயிரோடு வாழ முடியுமா?


Dharmavaan
ஜன 04, 2024 15:44

poy nee nirabaraathi enru niroobikka vendiyathuthaane


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி