மேலும் செய்திகள்
இந்திய கம்யூ., நுாற்றாண்டு நிறைவு விழா
3 hour(s) ago
புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியருக்கு விருது
3 hour(s) ago
போலீஸ் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி
3 hour(s) ago
மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கல்
3 hour(s) ago
பாட்னா: ''சித்தாந்த ரீதியாக பலம் இல்லாதவர்கள் சண்டையிட முடியாது. நிதீஷ் குமார் மீண்டும் வந்தால் நீங்கள் (தேஜஸ்வி யாதவ்) கட்சியில் சேர்க்க வேண்டாம்' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் கார்கே பேசியதாவது: இன்று இண்டியா கூட்டணி பா.ஜ.,வை போர்க்களத்தில் எதிர்கொள்கிறது. விசாரணை அமைப்புகள் மூலம், பா.ஜ., எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறது. அவர்கள் முன் நாங்கள் தலைவணங்க மாட்டோம். சித்தாந்த ரீதியாக பலம் இல்லாதவர்கள் சண்டையிட முடியாது. நிதீஷ் குமார் மீண்டும் வந்தால் நீங்கள் (தேஜஸ்வி யாதவ்) கட்சியில் சேர்க்க வேண்டாம். கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் மோடியின் கேரண்டி எனக் கூறி வருகிறார். 'பா.ஜ., வின் அல்லது மத்திய அரசின் உத்தரவாதம்' என்று கூறவில்லை. இப்போது பிரதமர் மோடியின் உத்திரவாதங்களைச் சொல்கிறேன். 2014ல் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தரப்படும் என்று சொன்னார். அப்படிச் செய்தாரா?. 2022க்குள் ஒவ்வொரு நபருக்கும் நிரந்தர வீடு இருக்கும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என பிரதமர் மோடி 2019ம் ஆண்டு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வது மட்டுமே அவருக்கும் அவரது கட்சிக்கும் வேலை. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் வேலையில்லாததால் சாப்பிட உணவு கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அனைவரையும் ஏமாற்றுவது தான் பிரதமர் மோடியின் உத்தரவாதம். இவ்வாறு கார்கே பேசினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago