உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை": சொல்கிறார் நவீன் பட்நாயக்

"வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை": சொல்கிறார் நவீன் பட்நாயக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: 'வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்' என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், 'வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்' என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் விளக்கம் அளித்துள்ளார்.

உழைப்பாளி

மேலும் அவர் கூறியதாவது: வி.கே.பாண்டியனை குறை சொல்வது துரதிஷ்டவசமானது. கடந்த 10 ஆண்டுகளாக பல துறைகளில் வி.கே.பாண்டியன் சிறப்பாக பணியாற்றி உள்ளார். நேர்மையும், உண்மையும் உள்ள மனிதர் வி.கே.பாண்டியன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வி.கே. பாண்டியன் கடுமையான உழைப்பாளி.

வெற்றி...! தோல்வி....!

கடந்த இரண்டு புயல் காலங்களிலும், கொரோனா காலத்திலும் அவர் செய்த சேவை மகத்தானது. தேர்தலில் மக்களின் முடிவை பணிவோடு ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக நாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது மக்களின் கையில் உள்ளது. எனது உடல்நிலை சீராக உள்ளது. கடும் வெயிலும் ஒரு மாதமாக தேர்தல் பிரசாரம் செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 19:08

பாக்கியராஜ் கூட எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என்றார்கள். என்னாச்சு?


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 19:07

இங்கே கலாம் அவர்களின் ஆலோசகர்ன்னு ஒருவர் சவடால் விடுகிறார். அது போலவா? ஐயா. இந்த பியூன் தொல்லை தாங்கலே..


Balasubramanian
ஜூன் 08, 2024 18:40

அரசியல் ஆலோசகராக வைத்து நூற்று அறுபது கோடி தந்தாலும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள், வாரிசு என்றால் சொந்த மகனாக இருக்க வேண்டும் அல்லது உடன் பிறவாதவராக இருக்க வேண்டும்! அப்போது தான் மக்கள் ஒத்துக் கொள்வார்கள்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 16:58

இதை அப்பவே சொல்லியிருக்கலாமே ????


மேலும் செய்திகள்









புதிய வீடியோ