உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பலாத்காரம் செய்த போலீசார்: குறிப்பு எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை

பலாத்காரம் செய்த போலீசார்: குறிப்பு எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிராவில் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னர், போலீசார் தன்னை பலாத்காரம் செய்ததுடன், மனரீதியாக துன்புறுத்தியதாக கையில் குறிப்பு எழுதி வைத்தார்.மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலைக்கு முன்னர் அந்த பெண் டாக்டர் தனது இடது கையில் தனது மரணத்துக்கு காரணம் குறித்து குறிப்பு எழுதி வைத்து இருந்தார்.அதில், போலீஸ்காரர் கோபால் பத்னே தான் எனது மரணத்துக்கு காரணம். அவர் நான்கு முறை என்னை பலாத்காரம் செய்தார். அத்துடன் கடந்த ஐந்து மாதங்களாக என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தினார் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் பங்கர் என்ற காவலர் தன்னை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தகவல் அறிந்த முதல்வர் பட்னாவிஸ், டாக்டர் தற்கொலை குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இந்நிலையில், கோபால் பத்னே சஸ்பெண்ட் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு போலீஸ்காரரை தேடும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Anantharaman Srinivasan
அக் 24, 2025 20:32

பெண் டாக்டருக்கும் போலீஸ்காரருக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது. பெண் டாக்டர் எப்படி போலீசாரிடம் மாட்டினார்.


Rathna
அக் 24, 2025 20:24

இவ்வளவு சமூக தளங்கள் உள்ள காலத்தில் ஒரு வீடியோ எடுத்து ஆபத்தை வெளியில் சொல்லி இருந்தால் அயோக்கியர்களை உள்ளே வைத்து இருக்கலாம். சாவு என்பது தீர்வு இல்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். அயோக்கியர்களை தோலுரித்து காட்ட வேண்டும்.


Sudha
அக் 24, 2025 20:06

டாக்டர், போலீஸ் வசம் மாட்டிய பின்னணி, இந்த கயவர்களின் பின்னணி இவை யாவும் ஆராயப்பட வேண்டும். இன்றைய சூழலில் எந்த பாகுபாடுமின்றி விரைவாக தண்டனை கொடுப்பதே அரசு மற்றும் நீதித்துறையின் கடமை. அது இல்லாத பட்சத்தில் எல்லோரும் அயோக்கியர்களே.


Krishnamurthy Venkatesan
அக் 24, 2025 19:23

இத்தகைய நபர்கள் எந்த மாநிலமாக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கில் போட வேண்டும். நாள் கடத்தினால் உச்சநீதி மன்றத்தில் தப்பிக்கவும் வாய்ப்புண்டு.


Sudha
அக் 24, 2025 19:13

சுட்டு விடலாம்


ராம் சென்னை
அக் 24, 2025 18:56

தமிழ்நாட்டில் ஒரு சில நாட்கள் முன்பு திருவண்ணாமலையில் ஆந்திராவில் இருந்து வந்து இறங்கிய ஒரு பெண்ணை இரண்டு காவலர்கள் கற்பழித்தனர். அதற்கு இன்னும் தமிழ்நாட்டில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது நீங்கள் குதித்து ஆடுகிறீர்கள்.பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படி ஒரு அவலம் நடந்து விட்டேதே என்று.. தமிழ்நாட்டில் இப்படி ஒரு அவலம் நடந்தது அப்ப நீங்க எல்லாம் எங்க போனீங்க வாயில ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டிங்களா.


Techzone Coimbatore
அக் 24, 2025 18:12

தெரு நாய்களால் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி ஒட்டுமொத்தமாக தெரு நாய்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசுகள், ஏன் இந்த மாதிரி மனித மிருகங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து,ஏன் ஒரு நிரந்தர தீர்வு குடுக்க வில்லை? ஏன் என்றால் மனிதர்கள் என்றால் உயர்ந்தவன், நாய்கள் என்றால் கேவலம். அதனால் தான் காலம்காலமாக வயது வித்தியாசம் இல்லாமல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையாமல், பெருகி வருகின்றன. பெயருக்கு தான் ஆறறிவு உள்ள மனிதன், ஆனால் குணத்தில் நாய்களை விட மோசமான குணம் கொண்டவன். அதற்கு இது போன்ற சம்பவங்களே உதாரணம்.


SANKAR
அக் 24, 2025 18:57

which State took action against street dogs and killing them?!


RAMESH KUMAR R V
அக் 24, 2025 17:52

இதுபோன்ற சம்பவங்களை முளையிலே கிள்ளி எறியவேண்டும் வளரவிட்டால் ஆபத்து. பாவம் ஒரு இளம் மருத்துவர் உயிர் பறிபோனது. ஆழ்ந்த அனுதாபங்கள்.


Indian
அக் 24, 2025 18:47

இப்படியே ஆழ்ந்த அனுதாபங்கள் சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான் ..


Raj S
அக் 24, 2025 17:52

நல்ல வேல, நம்ம திருட்டு திராவிட மாடல் மாதிரி, அந்த பொண்ணு கைல வேற யாரோ பொய்யான தகவலை எழுதி இருக்காங்கனு சொல்லி கேச மூடி, அத செஞ்சவன வேற இடத்துக்கு மாற்றி உடாம, அந்த கயவனை உடனே இடைநீக்கமாவது செஞ்சாங்களே... குற்றங்கள் இன்னும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும், அதுக்கு நீதித்துறை அரசியல் அறிக்கை மட்டும் விட்டுட்டு இருக்காம சரியான தண்டனையை விரைவில் குடுக்கவும் கத்துக்கணும்...


chandran
அக் 24, 2025 18:41

இல்லை ராஜ். இந்த சம்பவம் நடந்தது திருட்டு திராவிட மாடல் ஆட்சி அடக்குற மாநிலத்தில் தான்.


Ram
அக் 24, 2025 17:27

இவனை என்சௌண்டேர் செஞ்சு கொள்ளணும்


சமீபத்திய செய்தி