உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "நாங்கள் தான் மூன்றாவது பெரிய கட்சி": அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சி

"நாங்கள் தான் மூன்றாவது பெரிய கட்சி": அகிலேஷ் யாதவ் மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: 'சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது' என அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: ஒருபுறம் தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மறுபுறம் சமாஜ்வாதி கட்சி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. எதிர்மறை அரசியல் முடிவுக்கு வந்துள்ளது. மக்கள் பிரச்னைகளை சரி செய்யும் அரசியல் சகாப்தம் துவங்கியுள்ளது. நாங்கள் மக்கள் இடம் இருந்து அதிக அன்பை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் மாணவர்கள் பலர் 100% மதிப்பெண்கள் எடுத்திருப்பது பெரிய குளறுபடியைக் காட்டுகிறது. பா.ஜ., ஆட்சியில், வினாத்தாள்கள் கசிவு சம்பவம் நடக்கிறது. இளைஞர்கள் அரசு தேர்வுகள் மீது வைத்திருந்த நம்பிக்கை இழக்கத் துவங்கியுள்ளனர். பா.ஜ., அரசின் மிகப்பெரிய தோல்விகளில் இதுவும் ஒன்று.

தண்டனை

இந்த விஷயத்தை நீதிமன்றம் தானாக முன் வந்து, முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மேலும் எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகளை அகற்ற வேண்டும். நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

venugopal s
ஜூன் 09, 2024 06:49

தமிழகத்தில் பாஜக எல்லா இடங்களிலும் தோற்ற பிறகும் தாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று பீற்றிக் கொள்வது போல் உள்ளது!


சோலை பார்த்தி
ஜூன் 08, 2024 22:43

மக்களை ஏமாற்றும் டுபாக்கூர் நம்பர்கள் ல. . .தி.மு.க. திரிக்கிற காங் கிராஸ் சமாஜ் வாந்தி . .காங கிராஸ். . .கூடவே இருக்க கம்பளிபூச்சி கட்சி இவங்க தான். .நம்பர் 1.2.3.4 னு. . .அவங்களுக்கு உள்ளேயே பயங்கர போட்டி


sankaranarayanan
ஜூன் 08, 2024 20:34

மூன்றாவது மூளையிலே என்பார்கள் இவர் எந்த மூளையில் இருப்பார்?


Ramesh Sargam
ஜூன் 08, 2024 19:50

ஆனால் உன்னுடையதுதான் பெரிய மூக்கு..


HoneyBee
ஜூன் 08, 2024 19:44

இந்த தேர்தலில் மட்டுமே....


ராமகிருஷ்ணன்
ஜூன் 08, 2024 18:52

40 சீட்டு வாங்கிய திமுக எத்தனாவது பெரிய கட்சி என்று சொல்லி விட்டு நீங்க சொல்லுங்க


Senthil K
ஜூன் 08, 2024 17:55

இந்த 2 வது எதிர் கட்சி தலீவர்.. 3 வது.. எதிர் கட்சி தலீவர்.. 4 வது.. எதிர் கட்சி தலீவர்.. போஸ்டிங் தரமாட்டாங்களா பாஸ்..


sundarsvpr
ஜூன் 08, 2024 17:52

குடும்ப வாரிசு அரசியல் நாட்டை விட்டு போகும்போது நீட் தேர்வு காணாமல் போகும்.


Gurumoorthy Padmanaban
ஜூன் 08, 2024 17:45

முதலில் நீட் , ஜே, ஈ, ஈ, என்ற பெயரில் கோச்சிங் சென்டர் நடத்துபவர்களை தடை செய்தால் 99% குற்றங்கள் தடுக்க படும். இந்த கோச்சிங் சென்டர் என்ற பெயரில் பல லக்ஷ கணக்கான பணத்தை பெற்றோரிடம் இருநது வசூல் செய்யும் இந்த மாபியா கும்பலை தடுக்க வேண்டும். வருடம் முழுவதும் தங்கள் சென்டரில் வகுப்பு எடுத்து மாணவர்களை எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவையான பள்ளி கல்வியை கற்க விடாமல் வெறும் காம்பெடிட்டிவ் எக்ஸாம்க்கு தயார் செய்வது ஒரு கேலி கூத்து.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 19:01

துரைமுருகன்,, வேலு, விடியலின் மகள் நடத்தும் பள்ளிகளிலும் எக்ஸ்ட்ராவா பணம் வாங்கிகிட்டு நீட் கோச்சிங் நடத்துறாங்க. அதைப்பற்றி?


sri
ஜூன் 08, 2024 19:14

correct


Anand
ஜூன் 08, 2024 17:12

அப்படியானால் ஓங்கோலுக்கு துணை பிரதமர் பதவி வெறும் கனவு தானா?


sri
ஜூன் 08, 2024 18:15

ஆட்சிக்கே இவங்க வரவில்லை.அதற்குள் பிரதமர் பதவிக்கு கால் நடுகிறார் இனி எல்லாரும் வரிசையாக வருவார்கள்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ