உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கரில் உள்ள தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அபு்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sfoinhnu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நக்சலைட்டுகள் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் நக்சலடை்டுகளை தேடும் பணி நடந்து வருகிறது, என்றனர். இந்த ஆண்டு என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ