உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாணவி கூட்டு பலாத்காரம் 4 பேர் கைது

மாணவி கூட்டு பலாத்காரம் 4 பேர் கைது

விசாகப்பட்டினம், ஆந்திராவின், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இறுதி ஆண்டு சட்டக்கல்லுாரி மாணவி, தன்னுடன் படிக்கும் மாணவரை காதலித்து வந்தார். அந்த பெண்ணை, ஆகஸ்ட் 13ல் வீட்டுக்கு வரும்படி அழைத்துச் சென்ற காதலன், அவரை தன் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை படம் பிடித்து, அந்த பெண்ணை அடிக்கடி மிரட்டி பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதனால், அந்த பெண் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றிய தந்தையிடம் நடந்தவற்றை கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக, ஆந்திர எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்., சார்பில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உள்துறை அமைச்சர் அனிதா வான்கலாபுடி ஆகியோர் கவனத்துக்கு என, குறிப்பிட்டு இருந்தது. கூட்டு பலாத்காரம் செய்த பாதவம்சி, 27, பொட்டு ஜெகதீஷ், 27, பொலிப்பள்ளி ஆனந்த், 28, தவுளப்பள்ளி ராஜேஷ்,23, ஆகிய நால்வரை, விசாகப்பட்டினம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை