வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மோடி மந்திரம் ஓதும் குமாரசாமி, அவர் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு உதவ மாட்டாரா?
பெலகாவி; கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெலகாவியை சேர்ந்த தாய் - மகள் உட்பட நான்கு பக்தர்கள் இறந்தனர்.உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடந்து வரும், கும்பமேளாவில் நேற்று திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி, பெலகாவி பக்தர்கள் நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. பெலகாவி நகரின் வடகாவியை சேர்ந்த ஜோதி ஹடரவாத், 44, இவரது மகள் மேகா ஹடரவாத், 24, சிவாஜிநகரின் மகாதேவி, 48, ஷெட்டிஹள்ளியின் அருண் கோர்படே, 61 ஆகியோர் உயிரிழந்தனர்.கடந்த 26ம் தேதி பெலகாவியில் இருந்து 60 பக்தர்கள் அடங்கிய குழு, இரண்டு பஸ்களில் பிரயாக்ராஜ் பயணம் செய்தது. இந்த குழுவில் சென்றவர்களில், நான்கு பேர் இறந்து உள்ளனர். இந்த தகவல் அறிந்ததும் உயிரிழந்தவர்கள் வீடுகளுக்கு எம்.எல்.ஏ.,க்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். நான்கு பேரின் உடல்களை பெலகாவி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் முகமது ரோஷன் கூறி உள்ளார். நான்கு பேர் உயிரிழப்புக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். உடல்களை பெலகாவிக்கு கொண்டு வர, பெலகாவி கூடுதல் எஸ்.பி., ஸ்ருதி, கே.ஏ.எஸ்., அதிகாரி ஹர்ஷா ஷெட்டி பிரயாக்ராஜ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.பெலகாவி சென்றுள்ள கன்னடர்களுக்கு உதவி தேவைப்பட்டால், ஸ்ருதி - 95917 60190; ஹர்ஷா ஷெட்டி - 98867 45505 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம். அரசு சார்பில் 080-223 40676 என்ற ஹெல்ப்லைன் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் அறிவுறுத்தலின் படி, கும்பமேளாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரெனும் பாதிக்கப்பட்டு இருந்தால், டில்லியில் உள்ள எனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம்.- குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர்.
மோடி மந்திரம் ஓதும் குமாரசாமி, அவர் மாநிலத்தில் உள்ளவர்களுக்கு உதவ மாட்டாரா?