ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
ஹாவேரி; ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
ஹாவேரியின் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில், நான்கு சிறுவர்கள் உயிரிழந்தனர்.ஹாவேரி, ஹனகல்லின் கொப்பரசிகொப்பா கிராமத்தில் வசித்தவர்கள் தனுஷ் சோளப்பனவர், 13, நிகில் ஜெகதீஷ் நாகோஜி, 11. இவர்கள் நண்பர்கள். தனுஷ் தனியார் உயர்நிலை பள்ளியிலும், நிகில் அரசு பள்ளியிலும் படித்து வந்தனர். இரண்டு சிறுவர்களும், நேற்று காலை ஏரியில் குளிக்க சென்ற போது, ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.* ஹாவேரி, ஷிகாவியின் அத்திகேரி கிராமத்தில் வசித்தவர்கள் பிரஜ்வல் தேவரமணி, 14, சனத் பூசரெட்டி, 14. இவர்கள் நேற்று காலையில் ஏரிக்கு நீச்சலடிக்க சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.