உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 18 நாளில் 4 கோடி; பா.ஜ.வின் மின்னல் வேக சாதனை!

18 நாளில் 4 கோடி; பா.ஜ.வின் மின்னல் வேக சாதனை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்து பா.ஜ., வரலாற்று சாதனை படைத்துள்ளது.ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியில் சேருமாறு மக்களை வலியுறுத்தும். கட்சியின் மீது ஈடுபாடு, அபிமானம் கொண்டவர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டு அதற்கான அடையாள அட்டையை பெற்றுக்கொள்வர். இது அனைத்து அரசியல் கட்சிகளிலும் நடக்கும் நிகழ்வு.இந்நிலையில் எந்த கட்சியும் செய்யாத சாதனையாக, 18 நாட்களில் 4 கோடி புதிய உறுப்பினர்களை பா.ஜ., சேர்த்து மற்ற கட்சிகளை மிரள வைத்துள்ளது. இந்த தகவலை பா.ஜ., தேசிய தலைமை தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது; 18 நாட்களில் 4 கோடி உறுப்பினர்களை கடந்துவிட்டோம். இன்னமும் உறுப்பினர்கள் சேர்ந்து கொண்டு வருகின்றனர். மற்றுமொரு சாதனையை பா.ஜ., படைத்துள்ளது என்று கூறப்பட்டு உள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே கூறி உள்ளதாவது; உறுப்பினர் சேர்க்கையில் புதுவேகம் உள்ளதுபோல், புதிய அடையாளங்களை உருவாக்குவது என்பதை பற்றி மக்கள் சிந்தித்து வருகின்றனர் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Tetra
செப் 22, 2024 06:18

உண்மைதான். ஏற்கனவே அதல பாதாள பாழும் கிணற்றில் இருப்பவர்களுக்கு தரை தெரியாது.


Selvin Christopher
செப் 21, 2024 22:32

Notaa


Selvin Christopher
செப் 21, 2024 22:32

நோட்டா .


Harindra Prasad R
செப் 20, 2024 23:50

நீங்க சொல்வதும் நகைசுவை தாநோ


venugopal s
செப் 20, 2024 22:42

தலைக்கு எவ்வளவு? ஐநூறா ஆயிரமா? ஸ்பான்ஸார் செய்தது அவர் தானே?


venugopal s
செப் 20, 2024 22:40

நகைச்சுவை நடிகர் சூரி ஒரு படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் கடைசியாக எல்லாக் கோட்டையும் அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுகிறேன் என்று சொல்வது போல் பாஜகவினரும் ஏற்கனவே கட்சியில் உள்ள எல்லா உறுப்பினர்களையும் நீக்கிவிட்டு மறுபடியும் அவர்களையே புதிதாக திரும்பவும் கட்சியில் சேர்த்து இந்தக் கணக்கை காட்டியிருப்பார்கள் போல் உள்ளது.


வைகுண்டேஸ்வரன்
செப் 20, 2024 22:10

நகைச்சுவை செய்தி. ஏன் 4 கோடி? 40 கோடி ன்னு போட வேண்டியது தானே? நாலு நாள் முன்னாடி, ஏற்கனவே உறுப்பினர், அமைச்சராகவே ஆகிவிட்ட அமித்ஷா, மீண்டும் உறுப்பினர் கார்டு எடுத்தார் என்று செய்தி வந்தது. ஏற்கனவே உறுப்பினர் ஆனவங்கல்லாம் மீண்டும் உறுப்பினர் ஆனா, 4 என்ன 40 கோடி கூட ஆகலாம். செத்து செத்து விளையாடறாங்க போல. செம காமெடி


Rajagopal Vsr
செப் 22, 2024 12:16

தமிழ் நாட்டில் வாழும் மக்கள் எப்போதுமே நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் யாரிடமாவது அடிவருடி அடிமைகளாக இருந்து... .இருந்து ... வந்ததால் இப்போது இப்படி பேசிக்கொண்டு திறிகிறார்கள்.


T.sthivinayagam
செப் 20, 2024 21:47

மின்னலால் ஒரு பயனும் இல்லை மழையே நன்மை தரும்


SUBRAMANIAN Naharaj
செப் 20, 2024 20:55

சூப்பர். 10 கோடியை தாண்ட வாழ்த்துக்கள் .


Periya Sangi
செப் 20, 2024 20:48

Super


முக்கிய வீடியோ