சிலிண்டர் வெடித்து 4 பேர் காயம்
டி.ஜே.ஹள்ளி: பெங்களூரு, டி.ஜே.ஹள்ளியில் உள்ள ஆனந்த் தியேட்டர் அருகே சையது நசீர் பாஷா - நசீனா பானு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 7 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர். சையத் நசீர், பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். சமையல் செய்துவிட்டு, சிலிண்டரை ஆப் செய்யாமல், ஆனில் வைத்து சென்று உள்ளார்.நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு வீடு திரும்பும்போது, சமையல் எரிவாயு வாசனை வந்துள்ளதை அறிந்த அவர், வீட்டிலிருந்து மனைவி, குழந்தைகளை அப்புறப்படுத்தி உள்ளார். எரிவாயுவை வெளியேற்ற மின்விசிறியை போட்டுள்ளார். ஆனால், சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குழந்தைகள், கணவன், மனைவி ஆகிய நான்கு பேருக்கும் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை சுக்கு நுாறானது.ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்தன. அருகில் உள்ள வீடுகளும் சேதமடைந்தன. காயமடைந்தவர்கள் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.