உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பலி

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு; தமிழகத்தைச் சேர்ந்த இரு பெண்கள் பலி

திருப்பதி: திருமலை திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்ளிட்ட6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் திருப்பதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜனவரி 10ம் தேதி நடைபெறுகிறது. இதனை காண இலவச தரிசன கட்டணம் நாளை அதிகாலை முதல் வழங்கப்படும் நிலையில், இன்றே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சேலத்தை சேர்ந்த பெண் மல்லிகா உள்ளிட்ட 6 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r8rlysbp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் வருடாந்திர உற்சவங்களில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி விழாவாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். அதன்படி ஜனவரி 10 முதல் 19ம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதனால் இவ்வழியாகச்சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் இலவச டோக்கன் பெற இன்றே கூட்டம் அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் சேலம் பொள்ளாச்சியை சேர்ந்த இரு பெண்கள் பலியாகினர்.

சந்திரபாபு அதிர்ச்சி

திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திரா முதல்வர் சந்திரபாபு அதிர்ச்சி தெரிவித்து உள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிட்டு உள்ள அவர், தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
ஜன 09, 2025 20:19

இலவசம் என்றாலே மக்கள் அதிகம் வருவார்கள் என்று திருப்பதி கோவில் நிர்வாகத்தினர் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். எடுக்கவில்லை. நிர்வாகத்திறன் அற்ற நிர்வாகத்தினர் பணியிலிருந்து அகற்றப்படவேண்டும். இனி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசம் எதுவும் அறிவிக்க கூடாது. மக்களும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு உயிரை விடக்கூடாது.


Ms Mahadevan Mahadevan
ஜன 09, 2025 12:47

வேளாங்கண்ணியில் கூட்டம் வரத்தன் செய்யும். அங்கு டிக்கட் கிடையாது. ஹிந்து கோவில்களில் தான் இப்படி தரிசன கட்டணம் வசூலிக்கிறார்கள். கடவுள் பெயரால் மோசடி


Padmasridharan
ஜன 09, 2025 08:05

ஒரு செத்த உயிருக்கு எவ்வளவு லட்சம் கொடுக்க போறாங்க ஆந்திரா கோவில் வாசல்ல நடந்த இந்த சம்பவத்திற்கு. அதே, இங்க தமிழ்நாட்டுல குடிச்சிட்டு செத்தாக்கூட லட்சங்கள் கொடுத்து புதைச்சிடுவாங்க. எங்களுக்கு ஓட்டு போடவும், வரி கட்டவும், லஞ்சம் கொடுக்கவும் மட்டும்தான் உரிமை. ஏதாவது கேட்டால் காவல் துறை தனிப்பட்ட முறையில் சிறை வாசம் காட்டுவாங்க


Kasimani Baskaran
ஜன 09, 2025 07:51

கெட்ட சகுனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். வர்த்தக ஸ்தாபனம் போல நடத்துவதை விட்டு அதை கோவிலாக நிர்வகிக்க வேண்டும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
ஜன 09, 2025 11:47

தமிழக கோவில்களையும் அப்படியே வர்த்தக ஸ்தாபனம் ஆக நடத்தாமல் கோவிலை கோவிலாக நடத்த வேண்டும்.


Subramanian
ஜன 09, 2025 06:57

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


venugopal s
ஜன 09, 2025 06:35

உச்ச கட்ட மூட நம்பிக்கையின் விளைவு!


அப்பாவி
ஜன 09, 2025 06:30

எதுவுமே இலவசம் கிடையாது.


Narayanan
ஜன 09, 2025 05:09

ஆழ்ந்த இரங்கல். அங்கே பிஜேபி கட்சி இல்லையோ. இங்கே நடந்து இருந்தால் பிஜேபி திராவிட ஆட்சி


Velan Iyengaar
ஜன 09, 2025 04:12

குறைந்த கூட்டம் இருக்கும்போது கூட பக்தர்களை கூண்டில் அடைத்துவைத்து காக்கவைத்து அனுப்பும் நடைமுறை எப்போது தான் ஒழியுமோ இந்த கோவிலில் ???? அப்படி இடித்து தள்ளி நீண்ட வரிசையில் போகவைப்பதில் இந்த கோவில் நிர்வாகத்துக்கு அலாதி பிரியம் .....


Amruta Putran
ஜன 09, 2025 03:31

Non Hindus should be deported from Thirupathy


முக்கிய வீடியோ