உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காட்டில் துயரம்; பள்ளி மாணவிகள் 4 பேர் லாரி மோதி பலி

பாலக்காட்டில் துயரம்; பள்ளி மாணவிகள் 4 பேர் லாரி மோதி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாலக்காடு: பாலக்காட்டில் பள்ளி முடித்து வீடு திரும்பிய 8ம் வகுப்பு மாணவிகள் மீது லாரி மோதியது. இதில் நான்கு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கரிம்பா மேல்நிலை பள்ளியில் இர்பானா, ரிதா, மிதா, ஆயிஷா ஆகியோர் 8 ம் வகுப்பு படித்து வந்தனர். இன்று மாலை 4:30 மணியளவில் பள்ளி முடித்து வீட்டுக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சிமெண்ட் ஏற்றி அதிவேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் லாரிக்கு இடையே சிக்கிய நான்கு மாணவிகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qa0ct2jo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் வந்து விபத்து ஏற்படுத்திய லாரியை அப்புறப்படுத்திய பிறகே சீரானது. இப்பகுதியில் சாலை முறையாக அமைக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதியினர், இதனால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.விபத்தில் மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர். சம்பவம் குறித்து கல்லடிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
டிச 13, 2024 07:32

கட்காரிகிட்டே சொல்லுங்கோ. வெளிநாட்டுக்க்ப் போனா மூஞ்சியை மறைச்சுக்கறாராம். கதி சக்தி சூப்பர்.


annamalai
டிச 12, 2024 22:57

ஆழ்ந்த இரங்கல்


Sudha
டிச 12, 2024 20:48

லாரி டிரைவர் பற்றி சிறு குறிப்பு கூட இல்லை. லாரி போட்டோ இல்லை. கள்ளு கஞ்சா பற்றிய விவரங்களும் இல்லை.


Ramesh Sargam
டிச 12, 2024 19:19

ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் பலியானால் தான் ஏதாவது நடவடிக்கை எடுப்பார்கள். பொதுமக்கள் இறந்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.


Mithun
டிச 12, 2024 18:18

பாலக்காடு முழுவதும் ரோடுகள் மிகவும் ஆபத்தானது. மக்கள் இனியாவது திருந்தி தகுதியானவர்களுக்கு வாக்களிக்கவும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை