உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது

போலீசை கீழே தள்ளிய 4 வாலிபர்கள் கைது

துமகூரு; துமகூரு நகரின் ராணி சென்னம்மா சதுக்கத்தில், நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக, ஒரு இரு சக்கர வாகனத்தில், நான்கு வாலிபர்கள் ஹெல்மெட் அணியாமல், தவறான வழித்தடத்தில் வந்தனர். இதை பார்த்த போக்குவரத்து போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர்.அபராதம் கட்டுமாறு கூறிய போக்குவரத்து போலீசை தடுத்து கீழே தள்ளினர். அத்துடன், தங்கள் மீது உள்ள தவறை மறைக்க, மொபைல் போனில் சமூக வலைதளம் மூலம் தவறான தகவலை பரப்பினர். 18 - 20 வயதுக்கு உட்பட்ட முகமது இஸ்மாயில், முகமது அப்பாஸ், அகமது, முகமது அலி ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை