உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ முகாமில் தாக்குதல் சாட் நாட்டில் 40 வீரர்கள் பலி

ராணுவ முகாமில் தாக்குதல் சாட் நாட்டில் 40 வீரர்கள் பலி

கோபோவா, சாட் நாட்டில், ராணுவ முகாமை குறிவைத்து, 'போகோ ஹராம்' பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், 40 பேர் வீரர்கள் உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம் 2009ல், கிளர்ச்சியை துவங்கியது. இதில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்தனர். அண்டை நாடான சாட்டிலும் போகோ ஹராம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சாட் நாட்டின் மேற்கு பகுதியில், நைஜீரியா எல்லையில் உள்ள கோபோவா என்ற இடத்தில், ராணுவ முகாமை குறிவைத்து, நேற்று முன்தினம் இரவு போகோ ஹராம் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சாட் அதிபர் மஹமத் இட்ரிஸ் டெபி இட்னோ, தாக்குதல் நடந்த பகுதியை நேற்று பார்வையிட்டார். தாக்குதல் நடத்திய போகோ ஹராம் அமைப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை