உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூருவில் நெரிசலை தவிர்க்க ரூ.40,000 கோடியில் சுரங்கப்பாதை

பெங்களூருவில் நெரிசலை தவிர்க்க ரூ.40,000 கோடியில் சுரங்கப்பாதை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர் : பெங்களூருவில், 40,000 கோடி ரூபாய் மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஓசூரில் விமான நிலையத்திற்கு சிக்கல் ஏற்படலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என, 2024 ஜூன் 27ல், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்காக, ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளியில் விமான ஓடுதளத்துடன் உள்ள, 'தனுஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேசன்' நிறுவனம், சூளகிரி அருகே உலகம் ஆகிய இரு இடங்கள் சரியாக இருக்கும் என, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளது.ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்லும் பயணியர் எண்ணிக்கையும், சரக்கு கையாளும் திறனும் குறையும். இதனால், பெங்களூரு விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில், தமிழக எல்லையை ஒட்டி புதிய விமான நிலையம் அமைக்க, கர்நாடகா அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராம்மோகன் நாயுடு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக உள்ளார்.அவர், கிருஷ்ணகிரியை ஒட்டி ஆந்திர எல்லையான, குப்பம் அருகே விமான நிலையம் அமைக்கும் யோசனையில் இருப்பதாகவும் தகவல் வருகிறது. இப்படி, ஓசூரில் விமான நிலையம் அமைக்க, கர்நாடகா, ஆந்திர மாநில அரசுகள் இடையூறாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது.

நெரிசல் அதிகம்

ஓசூரில் இருந்து பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையம், 75 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஓசூரில் இருந்து அங்கு செல்ல இரண்டரை மணி நேரம் ஆகிறது. அதுவே, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணியர் செல்ல வேண்டும் என்றால், இன்னும் பல மணி நேரம் கூடுதலாகும். அந்த அளவிற்கு பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகம்.ஓசூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால், பெங்களூரு நகரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு, ஓசூர் வளர்ச்சியடைந்து விடும் என, கர்நாடக அரசு கருதுகிறது. அந்த காரணத்திற்காக தான், ஓசூர் விமான நிலையத்திற்கு முட்டுக்கட்டை போட பார்க்கிறது. பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் இருந்து, 150 கி.மீ., துாரத்திற்கு எந்த விமான நிலையமும் வரக்கூடாது என, ஒப்பந்தம் உள்ளது. அதனால், பெங்களூரு விமான நிலையம், தமிழக அரசுக்கு என்.ஓ.சி., கொடுத்தால் மட்டுமே, ஓசூரில் விமான நிலையம் துவக்க முடியும்.பெங்களூரு போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி, மத்திய அரசு கூறினால் வேறு வழியின்றி, பெங்களூரு விமான நிலையம் என்.ஓ.சி., கொடுத்து தான் ஆக வேண்டும்.

நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், கர்நாடகா அரசு பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு, தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில், 60 கி.மீ., துாரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, 42,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரின் ஹெப்பால் முதல் சில்க்போர்டு வரை, 16.7 கி.மீ., துாரமும், கே.ஆர்.,புரம் முதல், நாயன்டஹள்ளி வரை, 16 கி.மீ., துாரமும், சுரங்கப்பாதை திட்டத்தை கர்நாடகா மாநில அரசு செயல்படுத்த உள்ளது.முதல்கட்டமாக, ஹெப்பால் முதல் சில்க்போர்டு வரை, 16.7 கி.மீ., துாரத்திற்கு, 17,780 கோடி ரூபாயில் சுரப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மே 22ம் தேதி அம்மாநில அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது. ஓசூரில் விமான நிலையத்திற்கு அனுமதி வாங்கி, பூர்வாங்க பணிகளை முடித்து விமான நிலையம் பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகளாகி விடும். அதற்குள், பெங்களூரு நகரில் சுரங்கப்பாதை திட்டத்தை கொண்டு வர அம்மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஓசூருக்கு விமான நிலையம் வருவதை தடுக்கும் முயற்சியில், கர்நாடக அரசு இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையெல்லாம் முறியடித்து, தமிழக அரசு ஓசூரில் விமான நிலையம் அமைக்க தீவிரம் காட்ட வேண்டும் என்பதே, ஓசூர் தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ashok kumar R
ஜூன் 08, 2025 17:40

காங்கிரஸ் போக்கு காட்டி எலக்ஷன் வரும் வரை காலம் தள்ளும். பாட் ஹோல் நிரப்ப காசு இல்லே . டெல்லிங் லை ஆஹ் ஹா ஆஹ் .


மஹா
ஜூன் 01, 2025 22:56

சுரங்கம் அமைப்பது அவ்வளவு எளிதல்ல,மத்திய அரசு உதவி இல்லாமல் முடியாது.கர்நாடக அரசிடம் இந்த பட்ஜெட் பணம் இல்லை. எல்லாம் வாய் சவடால். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து hebbal வரைக்கும் பெரிய நிறுவனங்கள் , மேம்பாலங்கள் , metro என பல தடைகள் உள்ளன. முதலில் இருக்கிற சாலைகளை பராமரிக்கட்டும், அப்புறம் சுரங்கம் கட்டலாம். பெங்களூர் வாசிகளுக்கு தெரியும் இது இவ்வளவு கடினமான வேலை என்று. நம்ப வேண்டாம்.


R Ramesh
ஜூன் 01, 2025 12:12

சுரங்கப்பாதையில் நெரிசல் வராதா கோபால்?


Ramesh Sargam
ஜூன் 01, 2025 12:17

சுரங்கப்பாதையில் கூட நெரிசல் வரும். ஆனால் அந்த திட்டத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கு அதிக பணம் வரும்.


Ramesh Sargam
ஜூன் 01, 2025 11:59

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணியர்கள் மற்றும் பெங்களூருவில் பல பகுதி மக்களுக்கு இந்த ஓசூர் விமான நிலையம் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். வேண்டும் ஓசூர் விமான நிலையம். குப்பத்தில் அமைந்தால் அங்குள்ள கொத்தமல்லி வியாபாரிகள் விமானத்தில் பயணிக்க வாய்ப்பில்லை. அதே ஓசூரில் அமைந்தால், ஓசூரில் உள்ள பல தொழில் வளாகங்களில் பணிபுரிபவர்கள், பொதுமக்கள் மற்றும் தனியாக தொழில் புரிவோர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். அருகில் பெங்களூரில் உள்ள Electronics City யில் பணிபுரியும் பல IT தொழிலாளர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக ஓசூரில் அமையவிருக்கும் விமானநிலையம் இருக்கும். வீண் அரசியல் வேண்டாம்.


Elango S
ஜூன் 04, 2025 16:42

கொத்தமல்லி வியாபாரிகள் கூட விமானத்தில் பறப்பார்கள் கொத்தமல்லி விலை பல மடங்கு உயரும் போது சுழன்றும் ஏர்பின்னது உலகம் இது குறள்


R Hariharan
ஜூன் 01, 2025 10:05

முதலில் பெங்களூரு ஓசூர் சேலம் இரட்டை பாதை கூடிய விரைவில் முடிக்க வேண்டும். அது முதிந்த பிறகு பெங்களூரு ஓசூர் மின்சார ரயில் அடிக்கடி விட வேண்டும். மேலும் பெங்களூரு ஓசூர் சேலம் வழியாக பல பயணித்தால் அதில் விரைவை ரயில் சேவை விட வேண்டும். இவைகள் முதிந்தல் தான் ஓசூர் ஏர்போர்ட் பற்றி யோசிக்க வேண்டும். கர்நாடக அரசு முட்டுக்கட்டி போடும்.


Kanns
ஜூன் 01, 2025 09:58

All Plans are PowerMisuses, MegaLoots& ShortCut ElectionWins. Slowly But Compulsorily SHIFT All Congested CapitalCities to Centre of States & Nation Greater Indias Centre is Bhopal/Nagpur Considering Tibet, SriLanka, Burma, Baluchistan.


Natarajan Ramanathan
ஜூன் 01, 2025 08:32

ஓசூரில் விமான நிலையம் வருவதற்கு ஒரு சதம்கூட வாய்ப்பே இல்லை.


GoK
ஜூன் 01, 2025 07:56

பண மூட்டை கை மாறும், அதுக்குன்னு ஒரு ஆள் இருக்கான். மாவட்டம் மாவட்டமா சுருட்டுறான்


VENKATASUBRAMANIAN
ஜூன் 01, 2025 07:25

இதில் காங்கிரஸ் மட்டும் சலைத்தது இல்லை. 40000கோடியில் 10% போட்டால் போதும். இதுதான் இவர்கள் திட்டம்.


GMM
ஜூன் 01, 2025 07:19

ஓசூர் விமான நிலையம் அமைக்க தகுதியான ஊர் கிடையாது. பயணிகள் தங்க, உணவு விடுதி, பாதுகாப்பாக இருக்க வசதிகள் குறைவு. திமுக தன் வியாபார ரீதியாக விமான நிலையம் வற்புறுத்துகிறது. பழைய ஊர் அமைப்பு. குறுகிய சாலைகள். முட்டு சந்து. பஸ், ரயில் நிலைய இணைப்பு சாலைகள் அகல படுத்த முடியாது. பெங்களூர் மைய படுத்தி ஓசூரில் சில தனியார் நிறுவனங்கள். தமிழகம் பாழ் பட்டு வருகிறது. ஓசூரில் காலி இடங்களில் லாரி பேட்டை அமைக்கலாம்.


சமீபத்திய செய்தி