உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 வாரத்தில் 410 முறை வெடிகுண்டு மிரட்டல்; இன்டர்போல் உதவியை நாடிய இந்தியா

2 வாரத்தில் 410 முறை வெடிகுண்டு மிரட்டல்; இன்டர்போல் உதவியை நாடிய இந்தியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் குறித்து இன்டர்போல் உதவியை இந்தியா நாடியுள்ளது. இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், விமானங்கள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்படுகின்றன. பின்னர், அது புரளி என தெரிய வருகிறது. நேற்றைய தினம் கூட, இ-மெயில் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தொடர் மிரட்டல்களால் பொதுமக்கள் பயத்துடனேயே விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விமான சேவைகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும், உள்நாடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு 410 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சமூகவலைதள நிறுவனங்களையும் மத்திய அரசு கண்டித்திருந்தது. வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வெளியான பதிவுகளை 72 மணிநேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், அதை செய்யத் தவறும் பட்சத்தில், ஐ.டி., சட்ட விதிகளின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. அதேவேளையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன், நவம்பர் 1 முதல் 19ம் தேதி வரையில் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால், விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களுக்கும், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான விசாரணைக்கு உதவுமாறு சர்வதேச குற்ற விசாரணை அமைப்பான இன்டர்போலின் உதவியை இந்தியா நாடியுள்ளது. அதேபோல, அமெரிக்காவின் விசாரணை அமைப்பான எப்.பி.ஐ.,யிடமும் (FBI) இந்தியா உதவி கேட்டுள்ளது. அதனையேற்று, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி குறித்த தகவல்களை திரட்டிக் கொடுக்க எப்.பி.ஐ., சம்மதித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தமிழ்வேள்
நவ 01, 2024 13:47

சீன அரசு உய்குரில் மேற்கொண்ட நடவடிக்கை போன்ற ஒன்றை இந்தியாவிலும் மேற்கொள்ளவேண்டும் ...அது முடியும் வரை ஊடகங்களுக்கு சென்சார் அவசியம் ...மூர்க்க மார்க்க பந்துக்கள் பாரத ராணுவம் துணை ராணுவம் பெயரை கேட்டால் தூக்கத்தில் கூட உச்சா போகும் அளவுக்கு பயத்தை காட்டி, பயத்தை நாடி நரம்புகளிலும் ஏற்றிவிட்டால் தவிர மார்க்கம் கட்டுப்படாது


Ramesh Sargam
அக் 31, 2024 21:56

கடந்த சில மாதங்களில் பல ரயில் விபத்துக்கள். சதிகாரர்கள் யார் என்று அறியவும் இந்தியா இன்டர்போல் உதவியை நாடவேண்டும்.


M Ramachandran
அக் 31, 2024 20:16

போடு படி அருவாளை. அமெரிக்கா நாம் எச்சரிக்காய்ய்யய்ய்ய இருக்க வேண்டியனிடமே அவன் மடியல் வளர்க்கும் திருடனை பிடிக்க சொல்லி முறையீடு.


duruvasar
அக் 31, 2024 17:46

இந்தவகை மிரட்டல்களை தமிழ்நாட்டில் ரசித்த நாலு கால் ஜெந்மங்கள் நிறைய இருந்தது தாண்டவகோனே


Ganapathy
அக் 31, 2024 14:59

எதுக்கு 72 மணிநேர அவகாசம். அதுக்குள்ள செத்தவங்களுக்கு திவசமே ஆயிருமே. உடனடியாக எடுக்கணும் இப்படிப்பட்ட பதிவுகளைன்னு கண்டிப்போட உத்தரவு போடுங்கய்யா. அதிகாரத்தை சரியாக உபயோகப்படுத்துங்கய்யா


வாய்மையே வெல்லும்
அக் 31, 2024 14:54

ரொம்ப கஷ்டப்படவேணாம் தலைநகர எதிரணி முக்கியஸ்தர் உள்ள வீடு சமையல்காரரிடம் குச்சிஐசு பஞ்சுமிட்டாய் குடுங்க. அன்னரோட எசமான் எந்தெந்த அந்நிய கைக்கூலிகளிடம் காசுவாங்கிட்டு நெருக்கம் காட்டுறாருன்னு கேளுங்க. குச்சிஐச நக்கிட்டே எல்லா உண்மையையும் சொல்லிவிடுவார் ..


புதிய வீடியோ