உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் பயணியிடம் 48 கொடிய விஷப் பாம்புகள் பறிமுதல்!

மும்பை: தாய்லாந்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடமிருந்து 48 கொடிய விஷப் பாம்புகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து ஒரு பயணி வந்திறங்கினார். சந்தேகத்திற்கிடமான நிலையில் வந்த அந்த பயணியை, சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அந்த பயணியின் உடமைகளை பரிசோதித்து பார்த்தபோது, 48 விஷ பாம்புகள் மற்றும் 5 ஆமைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.வனவிலங்கு நல சங்க குழுவினர் உதவியுடன் விஷ பாம்புகள் குறித்து இனங்களை அடையாளம் காணப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின்படி, ஊர்வனவற்றை அவை கொண்டு வரப்பட்ட நாட்டிற்கு திருப்பி அனுப்ப வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜூன் 02, 2025 18:05

இங்கு கொண்டு வந்து கமலாலயத்தில் அவைகளை விட்டு இருந்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது!


venugopal s
ஜூன் 02, 2025 18:03

இங்கு கொண்டு வந்து அவைகளை விட்டு இருந்தால் யாராலும் கண்டு பிடித்து இருக்க முடியாது.


ஆரூர் ரங்
ஜூன் 02, 2025 10:55

போதைக்காக விஷப் பாம்பினை தனது நாக்கில் லேசாக கொத்த விடுகிறார்கள். அன்னியப் பாம்புன்னா இன்னும் காஸ்ட்லி.


மீனவ நண்பன்
ஜூன் 01, 2025 21:42

தூங்கற பாம்பா இருக்கும்னு விட்டிருப்பாங்க


பட்டாயா ராம்
ஜூன் 01, 2025 21:42

இதுமாதிரி கொண்டாந்து மாட்டுனா விமான நிலையத்திலேயே தூக்கு ந்னு சட்டம்.போடுங்க.


அப்பாவி
ஜூன் 01, 2025 21:40

அங்கே எப்புடி உட்டாங்க?


Ramesh Sargam
ஜூன் 01, 2025 20:10

தாய்லாந்து விமான நிலைய அதிகாரிகள் எப்படி இவ்வளவு பாம்புகளை செக் செய்யாமல் விட்டார்கள். சாதாரணமாக ஒரு பயணி பயணித்தால் அங்குள்ள செக்யூரிட்டி அதிகாரிகள் பெல்ட்டை அவுரு, ஷூவை அவுரு, கைய தூக்கு, கால தூக்கு என்று செக் செய்வார்கள். ஆனால் 48 விஷ பாம்புகளை கொண்டு வந்தவனை எப்படி செக் செய்யாமல் விட்டார்கள்?


morlot
ஜூன் 01, 2025 21:19

Probably they are complice.They are like our some customs officers. Corruption there also.Every where in the world


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை