உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் 4வது தலைமுறை வந்தாலும் முடியாது: அமித் ஷா

ராகுலின் 4வது தலைமுறை வந்தாலும் முடியாது: அமித் ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: '' ராகுலின் 4வது தலைமுறையினர் வந்தாலும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவை கொண்டு வர முடியாது,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பலாமு என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:தேர்தல் பிரசாரங்களின் போது அரசியல் சாசன புத்தகத்தை ராகுல் காட்டுகிறார். ஆனால், உண்மையில் அந்த புத்தகம் அரசியல் சாசன புத்தகம் அல்ல. அவர் காட்டும் புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார். எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் அரசியலமைப்பு என்று எழுதப்பட்டு உள்ளது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும் அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள். நவ.,26ஐ அரசியலமைப்பு தினமாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார்.இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளது. சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது. மத ரீதியிலான இட ஒதுக்கீட்டை பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அனுமதிக்காது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. ராகுலின் 4வது தலைமுறையினர் கூட காஷ்மீர் சிறப்பு சட்டத்தை கொண்டு வர முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

வைகுண்டேஸ்வரன்
நவ 09, 2024 21:54

ஆணவம், அகம்பாவம் திமிர் பிடித்த பேச்சு. ரம்ஜானுக்கு சமையல் வாயு சிலிண்டர் இலவசம், தீபாவளி க்கு சிலிண்டர் இலவசம் என்று சொல்லிட்டு ஒன்றும் செய்யவில்லை. கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயராதவரையும், கோடிகளில் பிஜேபி யிடம் பணம் கொட்டிக் கிடக்கிறவரையிலும் பிஜேபி தலைவர்கள் என்ன வேண்ணாலும் பேசலாம். தமிழ் நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். வட இந்தியாவில் பிஜேபி, நீதிமன்றங்களுக்கு, தேர்தல் கமிஷனுக்கு, என்று மூலவர்களுக்கே காணிக்கை குடுத்து விடுகிறார்கள். ஜெயித்து விடுகிறார்கள்.


அப்பாவி
நவ 09, 2024 21:04

பத்து வருஷத்துக்கு முன்னாடி பா.ஜ என்ன முக்குனாலும் ஆட்சியைப் புடிக்க முடியாதுன்னு நினத்தார்கள். அவிங்க பேசினதை இப்போ இவிங்க பேசுறாங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாராலும் சொல்ல முடியாது.


தமிழ்நாட்டுபற்றாளன்
நவ 09, 2024 20:16

இப்படி தான் 400 பார் என்ன ஆச்சு 240 க்கு உங்களை இறக்கி மினாரிட்டி ஆகியது ராகுல் தான்


புதிய வீடியோ