உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 4 ராஜ்யசபா சீட்டுக்கு 5 பேர் போட்டி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி

4 ராஜ்யசபா சீட்டுக்கு 5 பேர் போட்டி ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி

பெங்களூரு :கர்நாடகாவில் காலியாக இருக்கும் நான்கு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, முக்கிய அரசியல் கட்சிகளின் சார்பில் ஐந்து வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். காங்கிரஸ் வெற்றியை தட்டிப்பறிக்க, ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி அதிரடி வியூகம் வகுத்துள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

கடைசி நாள்

இம்மாநிலத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட காங்கிரசின் ஹனுமந்தையா, சையத் நாசிர் உசேன், சந்திரசேகர்; பா.ஜ.,வின் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் ஆகியோரின் பதவி காலம், ஏப்ரல் 2ம் தேதி முடிவடைகிறது.இவர்களால் காலியாகும் இடங்களுக்கு, வரும் 27ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள்.இம்மாநிலத்தில் மொத்தம் 224 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், காங்., - 135, பா.ஜ., - 66, ம.ஜ.த., - 19 மற்றும் நான்கு சுயேச்சைகள் உள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், காங்கிரஸ் மூன்று, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., பதவி கிடைக்கும். இதன் அடிப்படையில், பா.ஜ., சார்பில் நாராயண கிருஷ்ணாச பந்தகே; காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொருளாளர் அஜய் மக்கன், தற்போது பதவிக்காலம் நிறைவு பெறும் சையத் நாசிர் உசேன், சந்திரசேகர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் நால்வரும், பெங்களூரு விதான் சவுதாவில், சட்டசபை செயலரும், தேர்தல் அதிகாரியுமான விசாலாட்சியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், ம.ஜ.த., வேட்பாளராக முன்னாள் எம்.பி., குபேந்திர ரெட்டி, முன்னாள் முதல்வர் குமாரசாமி, பா.ஜ., தலைவர் விஜயேந்திராவுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு, 46 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை. காங்கிரசிடம் சபாநாயகர் சேர்த்து, 135 ஓட்டுகள் உள்ளன. பா.ஜ.,வுக்கு 66 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், ஒரு வேட்பாளருக்கு 46 ஓட்டுகள் சென்று விட்டால், மீதி 20 ஓட்டுகள் இருக்கும். இத்துடன், ம.ஜ.த.,விடம் 19 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் உள்ளன. ஆக மொத்தம் கூட்டணி கட்சிகளிடம், 39 ஓட்டுகள் மீதமுள்ளன.

கட்சி மாறி ஓட்டு

ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டி வெற்றி பெறுவதற்கு, இன்னும் ஏழு எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் மட்டும் தேவை. இதற்கு, சுயேச்சைகள் இருவர் மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.,வான ஜனார்த்தன ரெட்டி ஆகியோருடன், காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் சில எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை திரட்டலாம் என்பது பா.ஜ., - ம.ஜ.த.,வின் வியூகமாகும்.இது குறித்து, துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''எங்களுக்கும் அனைத்து கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர். மனசாட்சி ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Duruvesan
பிப் 16, 2024 07:33

ஆக விடியல் பிரச்சாரம் செய்தால் காங்கிரஸ் வெல்லும். மேலும் EVM தடை செய்ய விடியல் கூவுவார்


Duruvesan
பிப் 16, 2024 07:18

பாஸ் விவசாயி எல்லோரையும் டெல்லி அனுப்பலயா? என்னையா கட்சி, கெஜ்ரி புலி பாரு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி