உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!

மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் பயணிகள் விழுந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக, தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g2ah9yof&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பயணிகள் உயிரிழந்த சம்பவத்தால் உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தாமரை மலர்கிறது
ஜூன் 09, 2025 19:23

இருபது கோடி மக்கள் ஒரே நகரத்தில் வாழவிரும்பினால், இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்யும். ஒரு அரசு எவ்வளவு தான் வசதிகள் செய்துதரமுடியும்? மக்கள் தான் பொறுமையாக அடுத்த ரயிலேறி போகவேண்டும். மக்களுக்கு பொறுமைகம்மியாகிவிட்டது. இந்த அசம்பாவிததற்கு முக்கிய காரணம் மக்களின் பொறுமை இன்மை மட்டும் தான்.


Gokul Krishnan
ஜூன் 09, 2025 17:49

பொது மக்களுக்கும் பொறுமை வேண்டும். ஆளும் கட்சி ஆண்ட கட்சி எதிலும் தொலை நோக்கு சிந்தனை அறிவு இல்லாத தலைவர்கள் இது தான் இந்திய மக்களின் தலை எழுத்து


Ganapathy
ஜூன் 09, 2025 15:41

உருப்படியான செய்தியை போடவும். பல ஆண்டுகளாக சாதாரணமாக நடக்கும் அந்த உள்ளூர் நிகழ்வுகளால் இங்குள்ள கடைக்கோடி தமிழனுக்கு தம்படி பைசா பிரயோசனமில்லை. .


அப்பாவி
ஜூன் 09, 2025 15:17

தானே, தாதர், குர்லா பகுதிகளில் கூட்டம் எப்பவும் அலைமோதும். அந்தப் பகுதிகளில் இனிமேல் புது கட்டிடங்கள் , அலுவலகங்கள் கட்டப் படுவது தடுக்கப்பட வேண்டும்.


அப்பாவி
ஜூன் 09, 2025 15:14

போறும்டா... மும்பை- தானே ஏரியாவை உட்டுருங்கடா...


தமிழன்
ஜூன் 09, 2025 14:05

கதவு இல்லாத ரயில்கள்.. தேவை அறிந்தும் கூடுதல் ரயில்கள் விடாத நிர்வாகம் என நிறைய சொல்லலாம். கொஞ்ச நேரம் முன்னாடி போனால் என்ன என மக்களையும் இதில் சேர்த்து கொள்ள தான் வேண்டும்.


RAAJ68
ஜூன் 09, 2025 12:29

வேலைவாய்ப்பு கருதி எல்லோரும் மும்பைக்கு போகிறார்கள் பல மாநிலங்களில் இருந்து குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து நிறைய மக்கள் மும்பை நோக்கி செல்கிறார்கள். மும்பையில் போக்குவரத்து வசதிகள் பெருகிக்கொண்டே போகின்றன ஆனாலும் மக்களின் தேவைகளை செய்ய முடியவில்லை. அந்தந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தி தர முடியாததால் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன எனவே இது மாநிலங்களின் தோல்வியை காட்டுகிறது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் புறநகர் ரயில்களில் நெரிசல்களில் அவதிப்பட்டு கொண்டு பயணம் செய்கின்றனர் தினம் வெளியே போவோர் வீடு திரும்புவார்களா என்ற நிலைமை தான் மும்பையில்.


Subramanian
ஜூன் 09, 2025 16:06

அருமை. மிகவும் சரியான கருத்து.


skv srinivasankrishnaveni
ஜூன் 09, 2025 11:53

எந்த raயில்னாலும் ற்றின் கிளம்பும்போது கதவுகள் தானாவே முடிக்கவேண்டும் விபத்துக்கள் நேராமல் இருக்க , மக்களுக்கும் பொறுமையே கிடையாது முன்னடி அடிச்சுண்டு ஏறுவதால் தான் இந்த விபரீதங்கள்


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:35

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க மேல் நாடுகளில் உள்ளதுபோல, அல்லது நம் நாட்டில் மெட்ரோ ரயில்களில் உள்ளதுபோல தானியங்கி கதவுகளை ரயில்வே நிர்வாகம் இந்தியாவில் ஓடும் அனைத்து ரயில்களும் பொருத்தவேண்டும் - பயணியர்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமென்றால்


Shankar
ஜூன் 09, 2025 11:22

மும்பை மற்றும் புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் என்பது அன்றாடம் காலையிலும் மாலையிலும் நடைபெறக்கூடிய நிகழ்வு தான். இதற்க்கு ஏதாவது முடிவு கட்ட அரசுகள் முயற்சி செய்யவேண்டும்.


புதிய வீடியோ