உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களை விபசாரத்தில் தள்ளிய துருக்கி பெண் உட்பட 5 பேர் கைது

பெண்களை விபசாரத்தில் தள்ளிய துருக்கி பெண் உட்பட 5 பேர் கைது

பெங்களூரு, : வெளி மாநில பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய துருக்கியைச் சேர்ந்த பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுப் பெண்கள் உட்பட, எட்டு பேர் மீட்கப்பட்டனர்.பெங்களூரில் சில நாட்களுக்கு முன்பு, மஹாதேவபுரா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில், 'ஸ்பா' என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்த இடத்தில் போலீசார் ரெய்டு நடத்தினர்.விபசாரத்தில் தள்ளப்பட்ட 44 பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக, 34 பேர் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து நகரின் பல இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா அளித்த பேட்டி:பெங்களூரு கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட தொம்மலுார் எச்.எஸ்.பி.சி., லே - அவுட்டில் உள்ள தனியார் விடுதியில் விபசாரம் நடப்பதாக, ஹலசூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இவ்வழக்கு பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய பையப்பனஹள்ளி போலீசார், 'பெங்களூரு டேட்டிங் கிளப்' என்ற பெயரில் டெலிகிராம் குழு குறித்து தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் டெலிகிராம் குழுவை நிர்வகிக்கும் வைஷாக் என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், துருக்கியை சேர்ந்த பயோனாஜ், தமிழகத்தை சேர்ந்த மென் பொறியாளர் கோவிந்தராஜ், பிரகாஷ், அக் ஷய் ஆகியோரை கைது செய்தனர்.துருக்கியை சேர்ந்த பயோனாஜ், 15 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இங்கு ரோஹித் சுவாமி கவுடா என்பவரை திருமணம் செய்து, இங்கேயே குடியேறிவிட்டார்.சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்தார். பின், உள்ளூர், வெளியூர் இளம்பெண்களை பயன்படுத்தி, விபசார தொழிலை நடத்தி வந்தார்.மேலும், ஜெய்ப்பூர், சென்னை, மைசூரு, புதுடில்லி, உதய்பூர், மும்பை ஆகிய இடங்களில் விபசார தொழில் இடைத்தரகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, பெங்களூரில் தொழில் நடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.இவர்களிடம் இருந்து உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆறு பேர்; உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இருவர் என, எட்டு பெண்கள் மீட்கப்பட்டனர். கைதானவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ