மேலும் செய்திகள்
கேரளாவின் இரு மாவட்டங்களில் பரவுகிறது பறவை காய்ச்சல்
2 hour(s) ago
ரூ.12 கோடி செலவில் 51 ஜீப்கள்; ஒடிஷா வனத்துறை தாம் துாம்
2 hour(s) ago
சிம்லா: ஹிமாச்சலில் 5 மாடி கட்டடம் இடிந்து சரிந்து விழும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மலை சூழ்ந்த பகுதியாகும். இங்கு மழைகாலங்களில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்பட்டு கட்டடங்கள் சரிந்து விழும்.இந்நிலையில் சிம்லாவின் தாமி என்ற மலைப்பகுதியில், இன்று 5 மாடி கட்டடம் திடீரென சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் மலைப்பாதையில் சாலைகள் பலத்த சேதமடைந்தன. கட்டடம் இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. முன்னதாக கட்டடத்தின் அடித்தளம் வலுவிழந்ததாகவும், இதையடுத்து கட்டடத்தில் வசித்து வந்தவர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டு முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
2 hour(s) ago
2 hour(s) ago