உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்!

250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் நேற்று (டிச.,09) மாலை 5 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அருகில் 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று இருந்துள்ளது. இதில், 5 வயது சிறுவன் தவறி விழுந்தான். பதறி போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தனர். பின்னர் மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.நேற்றிரவு முதல் தற்போது வரை 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறுவன் தற்போது 150 அடி ஆழத்தில் இருக்கிறான். சிறுவன் உடல்நிலை சீராக உள்ளது. சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.தேசிய, மாநில மீட்பு படையினர் மீட்பதற்கு நீண்ட நேரம் போராடி கொண்டு இருக்கிறார்கள். ஜே.சி.பி மூலம் அருகில் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Azar Mufeen
டிச 10, 2024 20:43

இறைவனை திட்டக்கூடாது என்று நினைத்தாலும் இதுமாதிரி நிகழ்வுகள் நடக்கும்போது திட்டத்தான் தோன்றுகிறது


என்றும் இந்தியன்
டிச 10, 2024 17:23

ஆழ்துளை கிணறு உபயோகத்தில் உள்ளதா அப்படியென்றால் இது நடக்க வாய்ப்பில்லை. இல்லை அது செயலிழந்து விட்டது. அப்படியென்றால் அதை மண்ணைக்கொண்டு உடனே ஏன் மூடவில்லை. 5 வயது குழந்தை அனாதையா???தாய் தந்தை இல்லையா???அப்படி இருந்தால் இப்படி இருக்கும் கிணற்றருகே எப்படி குழந்தையை அனுப்பினார்கள். இது ன்ன முதல் தடவை நடக்கின்றதா இல்லவே ல்லை ஒவ்வொரு ஆதாமும் இதே செய்தி அப்போ அரசு அலுவலகம் என்ன செய்கின்றது தூங்கிக்கொண்டிருக்கின்றதா என்ன???


N Annamalai
டிச 10, 2024 16:10

போர் போடும் மக்கள் மூடி போட்டு மூட வேண்டும் .அவர்களுக்கு உத்தரவு போடா வேண்டும் .


வைகுண்டேஸ்வரன்
டிச 10, 2024 12:51

கேரளாவில் Borewell போடுகிறவர்கள் 50 செ. மீ. விட்டமும் 1 மீ. நீளமும் உள்ள கான்கிரீட் பைப் கொண்டு வருகிறார்கள். வேலை முடிந்ததும் இந்த பைப்பை borewell நடுவில் வர்ற மாதிரி வெச்சு பைப்பை இறக்கி விடுகிறார்கள். சுற்றிலும் மஞ்சள் கருப்பு பட்டை ஸ்டிக்கரும் ஒட்டி விட்டுத் தான் போகிறார்கள்.


sridhar
டிச 10, 2024 12:19

இதற்கு எப்போது விடிவு காலம் வரும்


Ramesh Sargam
டிச 10, 2024 11:31

கொஞ்ச நாட்களாக இந்த செய்தி வராமல் இருந்தது. நானும் மக்கள் தங்கள் தவறை உணர்ந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். இல்லை. மீண்டும் அவர்கள் தங்கள் தவறை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது, பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடுவதில்லை குழந்தைகளை அதன் அருகே விளையாட அனுமதிப்பது போன்ற தவறுகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். முதலில் மக்கள் திருந்தவேண்டும்.


பாமரன்
டிச 10, 2024 09:58

இந்த மாதிரி அறிவு ஜீவிகளை வச்சிக்கிட்டு 2047 இல்லை... எத்தனை யுகமானாலும் இந்தியா வளர்ந்த நாடாக முடியாது... ஒடனே தமிழ்நாட்டில் நடக்கலையான்னு பாய வரும் பக்கோடாஸ்க்கு... நான் எல்லாத்தும் சேர்த்துதான் சொன்னேன்...


sundarsvpr
டிச 10, 2024 09:49

கோடிக்கணக்கான மக்கள் நலனை அரசு கவனிக்கவேண்டும்.ஆனால் அரசால் முடியாது. வயல் காட்டிற்கு ஐந்து வயது சிறுவன் வருவான் என்று யார் எதிர்பார்ப்பர் ? யார் தவறு? பெற்றோர் தவறு. அரசை குறைகூறக்கூடாது. இது மாதிரி கிணறு வெட்டினால் இது மாதிரி தவறு எழாமல் இருக்க விதி முறை அமைக்கவேண்டும் கிணறு அல்லது குழி வெட்டும்போது பாதுகாப்பு சுவர் எழுப்பமுடியுமா ?முடியாது என்றால் தினமும் குழியை மூடி திறக்க மூட வழிமுறை இருக்கவேண்டும்


Thirumal Kumaresan
டிச 10, 2024 09:36

அதற்க்கான செலவையும் அந்த கிணற்ட்ரின் வுரிமையலரிடம் வசூலிக்கவேண்டும்


அப்பாவி
டிச 10, 2024 08:39

இந்த விஷயத்தில் மட்டும் ஒரு புண்ணாக்கு சீர்திருத்தமும் கிடையாது.


S Ramkumar
டிச 10, 2024 09:50

இதுல என்ன சீர்திருத்தம் வேண்டி கிடக்கு. குழி நொண்டியவன் பத்துக்கு பாத்து கான்க்ரீட் போட்டு மூடினால் முடிந்தது சோலி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை